தினமலர் :
மத்தியபிரதேசத்தில் மாணவிகளை அரசியல்
தலைவர்கள், அதிகாரிகளுக்கு விருந்தாக்கி, வீடியோ எடுத்து காரியம் சாதித்த
சம்பவத்தில் சிக்கிய 5 பெண்களும் விசாரணை காவலில் அடைக்கப்பட்டனர்.
;போபால்:
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் சுவேதா விஜய் ஜெயின். இவர் சமூக
சேவை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இதன் மூலம் அரசியல்வாதிகள் மற்றும்
உயர் அதிகாரிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சுவேதா அவர்களை செக்ஸ்
வலையில் சிக்க வைத்துள்ளார்.
இந்த விவகாரம் பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து போலீஸ்
கூடுதல் டி.ஜி.பி. சஞ்சீவ் சமி மேற்பார்வையில் சிறப்பு விசாரணை குழு
அமைக்கப்பட்டது.<
சீனியர் சூப்பிரண்டு ருச்சிவரதன் சிங் தலைமையிலான இந்த குழு முழுமையான
விசாரணையை மேற்கொண்டது. அதில் மத்தியபிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் சுவேதா
ஜெயின் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். அதிகாரிகள், முன்னாள் மந்திரிகள், அரசியல் தலைவர்கள் என பலரை அவர் தனது செக்ஸ் வலையில் வீழ்த்தி இருந்ததும் தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு கல்லூரி மாணவிகள் மற்றும் அழகாக உள்ள விபசார அழகிகளை சப்ளை செய்து தனது காரியத்தை சுவேதா ஜெயின் சாதித்து இருக்கிறார். கல்லூரி மாணவிகள் மற்றும் அழகிகளுடன் அவர்கள் தங்கி இருப்பதை ரகசியமாக வீடியோ படம் எடுத்து அதிகாரி மற்றும் அரசியல் தலைவர்களையே மிரட்டி பணமும் பறித்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு படையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
செக்ஸ் வலையில் வீழ்த்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மூலமாக அரசு காண்டிராக்ட்டுகளை பெறுவது மற்றும் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வாங்கித்தந்து பணம் பெறுவது என பலவற்றையும் அவர் செய்துள்ளார்.
முதன்முதலாக ஒரு கல்லூரி மாணவியை செக்ஸ் வலையில் விழவைத்த சம்பவம் மூலம்தான் போலீசாருக்கு சுவேதா ஜெயினின் மோசடி லீலைகள் தெரியவந்தது.
இந்தூர் அருகே உள்ள நரசிங்க கார்க் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹீராலால் யாதவ். இவருடைய மகள் மோனிகா யாதவ் (வயது 18).
இவர் பிளஸ்-2 முடித்து கடந்த ஆகஸ்டு மாதம் கல்லூரியில் சேருவதற்கு முயற்சித்தார். அப்போது சுவேதா ஜெயினிடம் தொடர்பு கொண்டால் பெரிய கல்லூரியில் சீட் வாங்கித்தருவார் என்று அவருக்கு தகவல் கிடைத்தது.
எனவே, சுவேதா ஜெயினை மோனிகா சந்தித்தார். அப்போது சீட் பெற்றுத் தருவதாக கூறிய அவர் தனது விலையுயர்ந்த ஆடி சொகுசு காரில் மோனிகாவை போபால் நகருக்கு அழைத்து சென்றார்.
அங்கு மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் செயலாளர் அந்தஸ்தில் உள்ள 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் மோனிகாவை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு தனது ஆடி காரை மோனிகாவிடம் கொடுத்து பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்ய வைத்தார்.
சுவேதா ஜெயினுக்கு உதவியாளராக ஆர்த்தி தயாள் என்ற பெண் செயல்பட்டு வந்தார்.
ஆர்த்தி தயாள் ஒருமுறை மோனிகாவை இந்தூரில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலுக்கு
அழைத்து சென்று தங்கவைத்தார்.
அப்போது அரசு என்ஜினீயரான ஹர்பஜன்சிங்(60) என்பவரை அந்த ஓட்டல் அறைக்கு வரவழைத்தனர். அன்று இரவு மோனிகாவுடன் ஹர்பஜன்சிங் தங்கினார். அவர்கள் ஒன்றாக இருந்ததை ஆர்த்தியும், ரூபா என்ற பெண்ணும் ரகசியமாக படம் பிடித்தனர்.
பின்னர் இந்த படத்தை காட்டி ஹர்பஜன்சிங்கிடம் ரூ.3 கோடி பணம் கேட்டு மிரட்டினார்கள். இந்த விஷயத்தை யாரிடமும் சொன்னால் பெரும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என்று மோனிகாவையும் மிரட்டினார்கள்.
இதுபற்றி முழுமையான தகவல்களை திரட்டிய போலீசார் தொடர்ந்து விசாரித்ததில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 8 முன்னாள் மந்திரிகள் ஆகியோர் சுவேதா ஜெயின் வலையில் சிக்கியது தெரியவந்தது.
இன்னும் ஏராளமான உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் ஆகியோரும் செக்ஸ் வலையில் சிக்கியுள்ளனர். பெரும்பாலும் மகள் வயது, பேத்தி வயது உள்ள பெண்களிடம் இந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்க வைக்கப்பட்டதும் தெரிந்தது. அவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
சுவேதா ஜெயின் மொத்தம் 24 மாணவிகளை இவ்வாறு விருந்தாக்கியது தெரியவந்துள்ளது. மேலும், 40 விபசார அழகிகளை நிரந்தரமாக தன்னுடன் வைத்திருந்தார். அவர்களையும் ஆங்காங்கே அரசியல் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார்.
சுவேதா ஜெயினிடம் இருந்து ஏரளாளமான செக்ஸ் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகள் அரசியல் தலைவர்கள், பெண்களேடு இருப்பதை படம் பிடித்து சேகரித்து வைத்துள்ளார். சுமார் 4 ஆயிரம் வீடியோக்கள் அவரிடம் இருந்தன.
மத்தியபிரதேசம் மாநிலத்தையே உலுக்கிய இந்த விவகாரம் தொடர்பாக சுவேதா விஜய் ஜெயின், சுவேதா சுவப்னில் ஜெயின், பர்க்கா, ஆர்த்தி தயாள், மோனிகா யாதவ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் பின்னணியில் வேறு பலரும் இருக்கலாம் என கருதப்படுகிறது. அதுபற்றியும் தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சுவேதா விஜய் ஜெயின், சுவேதா சுவப்னில் ஜெயின், பர்க்கா ஆகியோரை வரும் 30-ம் தேதி வரையிலும்ஆர்த்தி தயாள் மற்றும் மோனிகா யாதவ் ஆகியோரை அக்டோபர் முதல் தேதி வரையிலும் போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக