
ஆனால் மும்பையில் நீட்தேர்வு எழுதியது உதித்சூர்யா இல்லை என்றும், அதற்கு பதிலாக ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி இருக்கிறார் என்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஆள்மாறாட்டம் மூலம் உதித்சூரியா கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக மாணவனின் தந்தையிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முயன்று வரும் நிலையில் சமபந்தப்பட்ட மாணவன், அவரது தந்தை உட்பட அந்த குடும்பமே தலைமறைவாகியுள்ளது. தற்போது இந்த சர்ச்சை பேருருவம் எடுத்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே உதித் சூர்யா சீனாவில் மருத்துவப் படிப்பை ஆரம்பித்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் உதித் சூர்யா மருத்துவப் படிப்பை தொடராமல் கைவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேனி கல்லூரியில் சேருவதற்கு முன் சீனாவில் இரண்டு மாதம் மருத்துவ படிப்பு தொடங்கி பாதியில் கைவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக