CHENNAI: A 25-year-old woman research scholar, pursuing Ph.D ..committed suicide by hanging
inside her hostel room. Police identified the deceased as Ranjana Kumari of Jharkhan ..
மின்னம்பலம் : சென்னை ஐஐடி விடுதியில் தங்கியிருந்த ஆராய்ச்சி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சனா குமாரி, சென்னை ஐஐடி உலோகவியல் துறையில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வந்தார். இவரது வயது 25. இவர், அங்குள்ள சபர்மதி விடுதியில் தங்கியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர், தனது அறையைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (ஜனவரி 1) மாலையில் அந்த அறையில் இருந்து நாற்றம் வருவதாகப் புகார் கூறினர் அங்கிருந்த மாணவிகள். இதையடுத்து கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அறையின் கதவை உடைத்துக்கொண்டு போலீசார் உள்ளே சென்றபோது, அவர் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. சடலத்தில் இருந்து நாற்றம் வெளிவருவதனால், அவர் புத்தாண்டு அன்று இறக்கவில்லை என்பது தெரிய வருவதாகக் கூறியுள்ளார் இது குறித்து விசாரணை நடத்திவரும் போலீஸ் அதிகாரி ஒருவர்.
அந்த மாணவி குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக