வெள்ளி, 4 ஜனவரி, 2019

அய்யப்பன் கோயிலுக்கு சசிகலா போனது உண்மைதான்...சி சிடிவி- வீடியோ Sri Lankan Is Third Woman To Enter Sabarimala Temple

A 46-year-old woman from Sri Lanka, who entered the Sabarimala temple last night, became the third woman of menstruating age in the temple's history to offer darshan to the shrine of Lord Ayyappa nestled in the Western Ghats, since Supreme Court ordered the end of a decades-old ban on women of menstrual age entering the shrine. In a CCTV footage of the temple, the Sri Lankan national is seen going inside the temple with the 'irumudi kettu' or offerings kit on her head.
tamiloneindia -Keerthi Arunachalam திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு இலங்கை பெண் சசிகலா சென்று சாமி கும்பிட்டது உண்மைதான் என்று கூறியுள்ள கேரள போலீசார், அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய விவகாரங்களில் சபரிமலை அய்யப்பன் கோயிலும் ஒன்றாகும். கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. இதனையடுத்து பெண்கள் சிலர் கோயிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் மற்றும் தீவிர பக்தர்கள் அவர்களை செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர்.
இருப்பினும், கனகதுர்கா, பிந்து ஆகிய இரண்டு பெண்கள் கேரள காவல்துறை உதவியுடன் சாமி தரிசனம் செய்தனர். இது அம்மாநில முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதனை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் சங் பரிவார் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்றது.


சபரிமலை பயணம் இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணி அளவில் காவல்துறை பாதுகாப்புடன் இலங்கையை சேர்ந்த சசிகலா என்ற பெண் சபரிமலை சென்றதாகவும், 18 படிகள் ஏறி தரிசனம் முடித்த பின்னர் பம்பையில் உள்ள முகாமிற்கு அவர் பாதுகாப்பாக திரும்பி கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.


 அய்யப்ப பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் கோயிலுக்குள் தாம் செல்லவில்லை என்று அந்த பெண் மறுப்பு தெரிவித்து உள்ளார். பம்பையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்த போது இதனை மறுத்துள்ளார். பேட்டியில் அவர் கூறுகையில், நான் ஒரு பக்தை. 48 நாட்கள் விரதத்தை முடித்து, அய்யப்பனை தரிசிக்க சென்றேன்.

ஆனால் என்னை செல்லவிடாமல் தடுத்துவிட்டனர். சாமி தரிசனம் செய்யக் கூடாது என்று என்னை தடுக்க இவர்கள் யார்?

 என்னுடைய கர்ப்பப்பை அகற்றப்பட்டுவிட்டது. அதற்கான மருத்துவ சான்றிதழும் என்னிடம் உள்ளது. ஆகையால் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முழு உரிமையும் எனக்கு இருக்கிறது என்றார். ஆதாரங்களை வெளியிட்ட போலீஸ் ஆதாரங்களை வெளியிட்ட போலீஸ் சம்பவம் குறித்து அவரது கணவர் கூறுகையில், நாங்கள் மரக்கூட்டம் என்ற பகுதி வரை மட்டும் தான் செல்ல முடிந்தது. அதன் பின்னர் எங்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர் என்றார்.

ஆனால் இந்த சம்பவத்தை மறுத்துள்ள கேரள காவல்துறை, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை பெண் சசிகலா கோயிலுக்குள் நுழையும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, சாமி தரிசனம் செய்ய தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்று போலீசார் உறுதிபட தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: