புதன், 2 ஜனவரி, 2019

கேரளாவை கிடுகிடுக்க வைத்த வனிதா மதில் போராட்டம் .. எழுச்சி பாடல்கள் .. அணிவகுப்பு


ns7.tv/ta/tami :சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வலியுறுத்தி, கேரளாவில் நடைபெற்ற மனித சுவர் அமைக்கும் போராட்டத்தில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
620 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற போராட்டத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு, ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெண்களை அனுமதிக்கும் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும் மகளிர் அமைப்புகள் மனித சுவர் அமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 இந்த போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத், மதத்தின் பெயரால் பெண்களின் உரிமையில் பாகுபாடு காட்டக்கூடாது என தெரிவித்தார். 620 கிலோ மீட்டர் தொலைவுக்கு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 30 லட்சம் பெண்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. மகளிர் அமைப்பினரின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: