வெள்ளி, 4 ஜனவரி, 2019

2019 தேர்தலில் மோடி தோற்றால் அனில் அம்பானி நாட்டை விட்டு தப்பி.. ஓடுவார்?

Swathi K : "அனில் அம்பானி".. ரிலையன்ஸ் கம்யூனிகேசன் (RCom) கம்பெனி
ஆரம்பிச்சு திவால் ஆனது தெரியும்.. இந்திய அரசு வங்கியில் கடன்வாங்கி இப்ப 45,000 கோடிக்கும் மேல் அது வாராக்கடனாக இருப்பதும் நமக்கு தெரிந்த விஷயம் தான்..
RCom கம்பெனி'க்கு தேவையான Telecom Equipments (தொலைத்தொடர்பு சாதனங்கள்) சுவீடன் நாட்டு Ericsson கம்பெனியிடம் வாங்கியதற்கு கொடுக்க வேண்டிய தொகையில் 550 கோடிகள் இன்னும் பாக்கி இருக்கிறது.. அதை டிசம்பர் 15க்குள் கொடுக்க சொல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.. ஆனால் அதை இன்று வரை ரிலையன்ஸ் திருப்பி கொடுக்கவில்லை..
அதனால் Ericsson இன்று சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று கொடுத்துள்ளது.. அதில் நிறைய விஷயம் இருந்தாலும், முக்கியமான இரண்டு விஷயம் 1. அனில் அம்பானியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் 2. அனில் அம்பானியின் பாஸ்போர்ட் முடக்கி வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க கோர்ட் முயற்சி எடுக்கவேண்டும்..

45,000 கோடிக்கும் மேல் கடன் வைத்துள்ள இதே அனில் அம்பானி ஆரம்பித்த "Reliance Defence" கம்பெனிக்கு (கொஞ்சம் கூட விமானமோ, விமான உதிரி பாகமோ செய்யும் அனுபவம் இல்லாத) தான் மோடி முன்னிலையில் 30,000 கோடிக்கு ரபேல் ஆர்டர் கிடைத்துள்ளது.. எவ்வளவு மோசமான பின்னணி உள்ள கம்பெனிக்கு இவ்வளவு பெரிய டீல்.. அதுவும் ராணுவ டீல்.. எவ்வளவு பெரிய ஊழலாக இருக்கமுடியும்.
2019 தேர்தலில் மோடி தோற்பது உறுதியானால் அனில் அம்பானி நாட்டை விட்டு தப்பி சென்றாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை..
- Swathi K
Reference:
https://m.businesstoday.in/…/ericsson-seeks-j…/1/306746.html

கருத்துகள் இல்லை: