திருவாரூர் தேர்தலில் திமுக சார்பாக பூண்டி கலைவாணன்தான் போட்டியிடுவார்?
மாலைமலர் : திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் என்.ஜி. ஆர். பிரசாத் என்பவர் மனு தாக்கல் செய்தார். அம்மனுவில் கூறியிருந்ததாவது:-
திருவாரூர் எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கஜா புயலினால், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நிவாரண பணிகள் நடந்து வருகிறது. புயலின் பாதிப்பில் இருந்து அப்பகுதி இன்னும் முழுமையாக மீளவில்லை.
அதனால், திருவாரூர் தொகுதியில் நிவாரண பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது. இதனால் மிகப்பெரிய முறைகேடு நடைபெறும். தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். எனவே, திருவாரூர் தொகுதிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தடையில்லை என்று கூறி, தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மற்றொரு வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு பிப். 7-தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக