, தோற்பவர் பற்றி மட்டுமே கவலைப்படும் விளையாட்டு ஊடகப் பிரிவாக ஆகிவிட்டது.
2017ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது நாம் பார்த்ததுபோல், பிரதமர் நரேந்திர மோடி இப்போதெல்லாம் தானாக முன்வந்து அரசியல் கதையாடல்களை உருவாக்குவதில்லை. அப்பிரசாரத்தின்போது அவர் நெகிழ்ச்சியாகவும் எதிர்வினை புரியும்படியும் இருந்தார்: காங்கிரஸ் தன் மீதான அந்தரங்கத் தாக்குதல் தொடுத்தது பற்றி புகார் கூறிக்கொண்டே தனக்கு முன் பிரதமராக இருந்தவர் பாகிஸ்தானியர்களுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக ‘சதிவலை’ (பின்னர் அதுபற்றி பேசவே இல்லை) பின்னுவதாகவும் கூறினார்.
நவம்பர் – டிசம்பரில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலைப் பார்த்தால் நாட்டின் எதிர்காலத்துக்கான தனது ஆக்கபூர்வத் திட்டம் பற்றிப் பேச பிரதமர் விரும்பவில்லை (அ) தயாராக இல்லை என்று தெரிகிறது. தனது 4½ ஆண்டு கால ஆட்சியைவிட காந்தி குடும்பத்தையே அவரது பேச்சுக்கள் குவிமையம் செய்தன. ஓட்டுக்கள் எண்ணப்பட்ட டிசம்பர் 11 அன்று மாநிலங்களவை நியமன உறுப்பினரும் அரசின் அதிகாரபூர்வ(மற்ற) பேச்சாளருமான ஸ்வபன் தாஸ்குப்தா பாஜகவின் 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரம் நம்பிக்கையை விட பயத்தைத்தான் நம்பும் என்று கணித்தார்: மோடியின் கீழ் நிலையான ஆட்சியா அல்லது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கீழ் குழப்ப நிலையா?
அதன் பின் கழிந்த இரு வரங்களில் பிரதமர் அரசியல் திட்டத்தை அறிவிக்காவிட்டாலும், குடியரசைத் தரமிறக்கி மோடிக்கு ஆதாயம் செய்வது போல் உண்மை / தார்மிக அடிப்படை இல்லாத பல கதையாடல்களைத் தேர்ந்தெடுத்து, தேசிய ஊடகங்களே அவர் பணியைச் செய்கின்றனவோ எனத் தோன்றுகிறது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசத் தேர்தல் முடிவுகள் காட்டும்போதும் ஊடகங்கள் இதே பாணியைத்தான் கடைப்பிடித்தன. மூன்றிலும் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியானவுடன் முதல்வர்களாக யார் ஆவார்கள் என்பதை ஊடகங்கள் கணிக்க ஆரம்பித்து விட்டன. 1984இல் சீக்கியர்களுக்கு எதிரான நடந்த இனக் கலவரத்தில் முக்கியப் பங்காற்றியவரை முதலமைச்சராக காங்கிரஸ் ஆக்குவது பற்றி செய்தித்தாள்களுக்கும் தொலைக்காட்சி சேனல்களுக்கும் அக்கறையில்லை. அவருடன் நேர்காணலையும் கண்டன.
அரசுகள் மாறினால் நிர்வாக ரீதியாக என்னென்ன மாற்றங்கள் வரும் எனவும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்திய அரசியல் ஊடகமானது ஜெயிப்பவர், தோற்பவர், எழும் / விழும் நட்சத்திரங்கள், ‘ஆட்ட நாயகர்’ பற்றி மட்டும் கவலைப்படும் விளையாட்டு ஊடகப் பிரிவாக ஆகிவிட்டது. விளையாட்டுப் போட்டிகள் போல் கூட்டினால் பூச்சியம் வரும்படி தேர்தல்களும் இருக்கும்: ஒரு வேட்பாளரது வெற்றி இன்னொரு வேட்பாளரின் தோல்வி. எதை ஊடகம் பெரிதாகக் காட்டுகிறதோ அவரே வெற்றி பெற்றவராவார்.
இந்தியாவுக்குத் தேவைப்படுவது என்ன
இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிறது. இந்த அமைப்பில் தலைமையை வைத்துத் தேர்தல் நடப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகளே அங்கு முக்கியம். ஆனால், நாடாளுமன்ற அரசியலைத் தலைமைக்கிடையே நடக்கும் போட்டியாக காட்டுவதால் ஊடகம் தன் கடமையில் பிறழ்கிறது. தேர்தலால் வாக்காளர்களின் மேல் ஏற்படும் அதீதமான தாக்கத்தைச் சிறுமைப்படுத்தும் ‘மோடி Vs காந்தி’ வாசகம் இதை வெற்றியே முக்கியம் என்ற சர்க்கஸ் போட்டியாக ஆக்கிவிடுகிறது. இன்னும் மோசமான நிலைமை என்னவென்றால் மத்திய அரசு என்ற முக்கியமான ஒரு விஷயத்தை தனிமனித ஆளுமை முக்கியம் என்பதான தலைமைப்படுத்தும் போட்டியாக ஆக்கி விடுகிறது. நெறிப்படுத்தும் / விசாரணை நடத்தும் ஏஜென்சிகளை அவர் கைப்பற்றுவதை சட்டரீதியாக இது ‘சரி’ என்றாக்கி விடுகிறது.
பல மாநிலத் தேர்தல்களில் தலைமைப்படுத்துதல் – சீசரிசம் என்றும் இதைச் சொல்லலாம் – பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இப்போது ஒரு தனிநபர் (அ) குடும்பத்தால் நடத்தப்படுகின்றன. ஆனால் தேசிய அரசியலில் 1989 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தபின் 2½ தலைமுறையில் தலைமைக்கான போட்டி எனச் சொல்ல முடியாத பல தேர்தல்களைக் கண்டோம். ஒவ்வொரு முறையும் குடியரசின் இன/மத ரீதியான சமத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டாட்சி அரசுதான் உருவானது; தனிநபரின் ஆளுமை முன்னணியில் இருந்ததாகத் தெரியவில்லை.
கூட்டணியாக ஆண்ட அரசுகளை ‘சீரற்றது’ எனச் சொல்வது தாராளமான ஒரு விமரிசனமாக இருக்கும். ஊழல் பரவியதற்கு அனைத்து அரசுகளும் சம அளவில் பொறுப்புதான். அசமநிலை, சுற்றுப்புற சுழல் சேதாரம், குடியரசு இதுவரை கண்ட மோசமான 3 இனக்கலவரங்கள் (காஷ்மீர் பிராமணர்கள் வெளியேற்றப்பட்டது, பாபர் மசூதி இடிப்பு, 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம்) ஆகியவை இக்கால கட்டத்தில் நடந்தேறின. தமக்கு முன் ஆண்டவர்கள் பொதுச்சுகாதாரம், சத்துணவு, கல்வித்துறைகளில் அடைந்த தோல்வியைச் சரிசெய்யும் வேலையில் இவர்களின் முன்னேற்றம் மிகவும் குறைவுதான்.
வாழ்க்கைத் தரம், கட்டமைப்பு முன்னேற்றத்தில் நவீன இந்தியா இதுவரை கண்டிராத அளவு வளர்ச்சியும் இக்காலகட்டத்தில் ஏற்பட்டது. தன்னைத்தானே திருத்திக்கொள்ளுதல், பாபர் மசூதி இடிப்பு போன்றவற்றிலிருந்து மீண்டு வருதல் (மெதுவாகவே) பொன்றவை குடியரசில் தானாக நிகழ்ந்தன. பயத்தை விட்டு எதிர்பார்ப்பின் வேட்பாளராக வாக்குக் கோரிய மோடியின் வாக்குகளுக்கு ஆதரவு கிடைத்து அவர் பதவிக்கு வந்தார்.
நேரு, இந்திரா காந்தி, மோடி ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் கிடைத்த அனுபவங்கள் ஒரு விஷயத்தை உணர்த்துகின்றன. வலிமை மிக்க ஒரு தலைவரை நம்பியிருப்பதும், அவரே நாட்டை உச்சத்திற்குக் கொண்டு செல்வாரென நம்புவதும் தவறு என்பதைக் காட்டுகின்றன. ஆனால் வலுவான தலைவருக்கான தேவை இன்னமும் நிலவுகிறது. பெரும்பான்மை கொண்ட அரசு கூட்டணி அரசைவிடப் பரவாயில்லை என்ற உணர்வும் நிலவுகிறது. 793 எம்.பி.க்கள், 30 முதல்வர்கள், 80 கோடி வாக்காளர்கள் உள்ள நாட்டில் மோடியின் குறைகளைத் தாண்டி அவருக்கு மாற்றாக யாருமில்லை என்ற நம்பிக்கையும் நிலைத்துவிட்டது. ‘மோடி Vs காந்தி’ போன்ற கதையாடல் போல, இக்கதையாடல்களிலும் உண்மை இல்லை. பல்லாண்டுக் காலம் எவ்விதச் சோதனைக்கும் ஆளாகமால் அவை உலவிவருகின்றன.
நில நிருபர்கள் இக்குற்றச்சாட்டுக்கு இவ்வாறு பதில் தருவார்கள்: மக்கள் விரும்புவது தலைமைப்படுத்துதலையும் வெல்பவர் / தோற்பவர்களையும்தான். ஆனால் இக்கதையாடல்கள் தரப்படுத்துதலையும் ‘க்ளிக்குகளை’ தூண்டவும் தேவை என்றுதான் அவர்கள் சொல்வதற்கு அர்த்தம். ஆனால் இது மாட்டை வண்டி இழுத்துச் செல்வது போன்றது. வாசகர் ஆர்வம் தெரிந்தால் மட்டுமே ஊடக நிறுவனங்கள் பிழைக்க முடியும்; எனவே ‘க்ளிக்’குகள், டி.ஆர்.பி.-க்களை உருவாக்கி செய்தியைத் தராமல் ‘அளித்துக்’ கொண்டிருக்கின்றனர். இல்லை என்றால் பிற தொழில்கள் போல சிறப்புப் பாதுகாப்பையோ (அ) பொது விழாக்களையோ கோராமல் அவர்கள் இருக்க வேண்டும்.
கேசவ் குஹா
நன்றி: https://scroll.in/article/906994/2019-polls-by-making-it-modi-versus-rahul-media-has-created-a-narrative-that-benefits-only-the-pm
2017ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது நாம் பார்த்ததுபோல், பிரதமர் நரேந்திர மோடி இப்போதெல்லாம் தானாக முன்வந்து அரசியல் கதையாடல்களை உருவாக்குவதில்லை. அப்பிரசாரத்தின்போது அவர் நெகிழ்ச்சியாகவும் எதிர்வினை புரியும்படியும் இருந்தார்: காங்கிரஸ் தன் மீதான அந்தரங்கத் தாக்குதல் தொடுத்தது பற்றி புகார் கூறிக்கொண்டே தனக்கு முன் பிரதமராக இருந்தவர் பாகிஸ்தானியர்களுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக ‘சதிவலை’ (பின்னர் அதுபற்றி பேசவே இல்லை) பின்னுவதாகவும் கூறினார்.
நவம்பர் – டிசம்பரில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலைப் பார்த்தால் நாட்டின் எதிர்காலத்துக்கான தனது ஆக்கபூர்வத் திட்டம் பற்றிப் பேச பிரதமர் விரும்பவில்லை (அ) தயாராக இல்லை என்று தெரிகிறது. தனது 4½ ஆண்டு கால ஆட்சியைவிட காந்தி குடும்பத்தையே அவரது பேச்சுக்கள் குவிமையம் செய்தன. ஓட்டுக்கள் எண்ணப்பட்ட டிசம்பர் 11 அன்று மாநிலங்களவை நியமன உறுப்பினரும் அரசின் அதிகாரபூர்வ(மற்ற) பேச்சாளருமான ஸ்வபன் தாஸ்குப்தா பாஜகவின் 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரம் நம்பிக்கையை விட பயத்தைத்தான் நம்பும் என்று கணித்தார்: மோடியின் கீழ் நிலையான ஆட்சியா அல்லது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கீழ் குழப்ப நிலையா?
அதன் பின் கழிந்த இரு வரங்களில் பிரதமர் அரசியல் திட்டத்தை அறிவிக்காவிட்டாலும், குடியரசைத் தரமிறக்கி மோடிக்கு ஆதாயம் செய்வது போல் உண்மை / தார்மிக அடிப்படை இல்லாத பல கதையாடல்களைத் தேர்ந்தெடுத்து, தேசிய ஊடகங்களே அவர் பணியைச் செய்கின்றனவோ எனத் தோன்றுகிறது.
வென்றவர்களும் வீழ்ந்தவர்களும்
2019இன் பொதுத் தேர்தலை ‘நரேந்திர மோடி Vs ராகுல் காந்தி’ என்பது போல் காட்டியுள்ளதுதான் இவற்றில் அடிக்கடி சொல்லப்படும் கதையாடல். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 10, ஜன்பத் வீட்டிலிருந்துதான் ஊடகங்களுக்கு செய்தி தரப்படுகிறது என்ற (வலதுசாரிகளிடம் பரவியுள்ள) ஒரு கருத்தை தவறு என்று இதுவே காட்டுகிறது. மூன்று மாநில தேர்தல் வெற்றிக்கான பாரட்டைப் பரவலாகத் தந்ததன் மூலம் இம்மாதிரி பிம்பத்தை தவிர்க்க காங்கிரஸ் விரும்பியது தெரிகிறது. கட்சிக் கொள்கைகள், கட்சியை விட பிரதமரின் புகழ் மிக அதிகம் என்றும், ராகுலுடனான நேரடியான தனிப் போட்டியில் அவருக்குத்தான் வாய்ப்பு அதிகமென்றும் காங்கிரசுக்கு நன்றாகவே தெரியும்.ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசத் தேர்தல் முடிவுகள் காட்டும்போதும் ஊடகங்கள் இதே பாணியைத்தான் கடைப்பிடித்தன. மூன்றிலும் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியானவுடன் முதல்வர்களாக யார் ஆவார்கள் என்பதை ஊடகங்கள் கணிக்க ஆரம்பித்து விட்டன. 1984இல் சீக்கியர்களுக்கு எதிரான நடந்த இனக் கலவரத்தில் முக்கியப் பங்காற்றியவரை முதலமைச்சராக காங்கிரஸ் ஆக்குவது பற்றி செய்தித்தாள்களுக்கும் தொலைக்காட்சி சேனல்களுக்கும் அக்கறையில்லை. அவருடன் நேர்காணலையும் கண்டன.
அரசுகள் மாறினால் நிர்வாக ரீதியாக என்னென்ன மாற்றங்கள் வரும் எனவும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்திய அரசியல் ஊடகமானது ஜெயிப்பவர், தோற்பவர், எழும் / விழும் நட்சத்திரங்கள், ‘ஆட்ட நாயகர்’ பற்றி மட்டும் கவலைப்படும் விளையாட்டு ஊடகப் பிரிவாக ஆகிவிட்டது. விளையாட்டுப் போட்டிகள் போல் கூட்டினால் பூச்சியம் வரும்படி தேர்தல்களும் இருக்கும்: ஒரு வேட்பாளரது வெற்றி இன்னொரு வேட்பாளரின் தோல்வி. எதை ஊடகம் பெரிதாகக் காட்டுகிறதோ அவரே வெற்றி பெற்றவராவார்.
இந்தியாவுக்குத் தேவைப்படுவது என்ன
இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிறது. இந்த அமைப்பில் தலைமையை வைத்துத் தேர்தல் நடப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகளே அங்கு முக்கியம். ஆனால், நாடாளுமன்ற அரசியலைத் தலைமைக்கிடையே நடக்கும் போட்டியாக காட்டுவதால் ஊடகம் தன் கடமையில் பிறழ்கிறது. தேர்தலால் வாக்காளர்களின் மேல் ஏற்படும் அதீதமான தாக்கத்தைச் சிறுமைப்படுத்தும் ‘மோடி Vs காந்தி’ வாசகம் இதை வெற்றியே முக்கியம் என்ற சர்க்கஸ் போட்டியாக ஆக்கிவிடுகிறது. இன்னும் மோசமான நிலைமை என்னவென்றால் மத்திய அரசு என்ற முக்கியமான ஒரு விஷயத்தை தனிமனித ஆளுமை முக்கியம் என்பதான தலைமைப்படுத்தும் போட்டியாக ஆக்கி விடுகிறது. நெறிப்படுத்தும் / விசாரணை நடத்தும் ஏஜென்சிகளை அவர் கைப்பற்றுவதை சட்டரீதியாக இது ‘சரி’ என்றாக்கி விடுகிறது.
பல மாநிலத் தேர்தல்களில் தலைமைப்படுத்துதல் – சீசரிசம் என்றும் இதைச் சொல்லலாம் – பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இப்போது ஒரு தனிநபர் (அ) குடும்பத்தால் நடத்தப்படுகின்றன. ஆனால் தேசிய அரசியலில் 1989 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தபின் 2½ தலைமுறையில் தலைமைக்கான போட்டி எனச் சொல்ல முடியாத பல தேர்தல்களைக் கண்டோம். ஒவ்வொரு முறையும் குடியரசின் இன/மத ரீதியான சமத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டாட்சி அரசுதான் உருவானது; தனிநபரின் ஆளுமை முன்னணியில் இருந்ததாகத் தெரியவில்லை.
கூட்டணியாக ஆண்ட அரசுகளை ‘சீரற்றது’ எனச் சொல்வது தாராளமான ஒரு விமரிசனமாக இருக்கும். ஊழல் பரவியதற்கு அனைத்து அரசுகளும் சம அளவில் பொறுப்புதான். அசமநிலை, சுற்றுப்புற சுழல் சேதாரம், குடியரசு இதுவரை கண்ட மோசமான 3 இனக்கலவரங்கள் (காஷ்மீர் பிராமணர்கள் வெளியேற்றப்பட்டது, பாபர் மசூதி இடிப்பு, 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம்) ஆகியவை இக்கால கட்டத்தில் நடந்தேறின. தமக்கு முன் ஆண்டவர்கள் பொதுச்சுகாதாரம், சத்துணவு, கல்வித்துறைகளில் அடைந்த தோல்வியைச் சரிசெய்யும் வேலையில் இவர்களின் முன்னேற்றம் மிகவும் குறைவுதான்.
வாழ்க்கைத் தரம், கட்டமைப்பு முன்னேற்றத்தில் நவீன இந்தியா இதுவரை கண்டிராத அளவு வளர்ச்சியும் இக்காலகட்டத்தில் ஏற்பட்டது. தன்னைத்தானே திருத்திக்கொள்ளுதல், பாபர் மசூதி இடிப்பு போன்றவற்றிலிருந்து மீண்டு வருதல் (மெதுவாகவே) பொன்றவை குடியரசில் தானாக நிகழ்ந்தன. பயத்தை விட்டு எதிர்பார்ப்பின் வேட்பாளராக வாக்குக் கோரிய மோடியின் வாக்குகளுக்கு ஆதரவு கிடைத்து அவர் பதவிக்கு வந்தார்.
நேரு, இந்திரா காந்தி, மோடி ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் கிடைத்த அனுபவங்கள் ஒரு விஷயத்தை உணர்த்துகின்றன. வலிமை மிக்க ஒரு தலைவரை நம்பியிருப்பதும், அவரே நாட்டை உச்சத்திற்குக் கொண்டு செல்வாரென நம்புவதும் தவறு என்பதைக் காட்டுகின்றன. ஆனால் வலுவான தலைவருக்கான தேவை இன்னமும் நிலவுகிறது. பெரும்பான்மை கொண்ட அரசு கூட்டணி அரசைவிடப் பரவாயில்லை என்ற உணர்வும் நிலவுகிறது. 793 எம்.பி.க்கள், 30 முதல்வர்கள், 80 கோடி வாக்காளர்கள் உள்ள நாட்டில் மோடியின் குறைகளைத் தாண்டி அவருக்கு மாற்றாக யாருமில்லை என்ற நம்பிக்கையும் நிலைத்துவிட்டது. ‘மோடி Vs காந்தி’ போன்ற கதையாடல் போல, இக்கதையாடல்களிலும் உண்மை இல்லை. பல்லாண்டுக் காலம் எவ்விதச் சோதனைக்கும் ஆளாகமால் அவை உலவிவருகின்றன.
நில நிருபர்கள் இக்குற்றச்சாட்டுக்கு இவ்வாறு பதில் தருவார்கள்: மக்கள் விரும்புவது தலைமைப்படுத்துதலையும் வெல்பவர் / தோற்பவர்களையும்தான். ஆனால் இக்கதையாடல்கள் தரப்படுத்துதலையும் ‘க்ளிக்குகளை’ தூண்டவும் தேவை என்றுதான் அவர்கள் சொல்வதற்கு அர்த்தம். ஆனால் இது மாட்டை வண்டி இழுத்துச் செல்வது போன்றது. வாசகர் ஆர்வம் தெரிந்தால் மட்டுமே ஊடக நிறுவனங்கள் பிழைக்க முடியும்; எனவே ‘க்ளிக்’குகள், டி.ஆர்.பி.-க்களை உருவாக்கி செய்தியைத் தராமல் ‘அளித்துக்’ கொண்டிருக்கின்றனர். இல்லை என்றால் பிற தொழில்கள் போல சிறப்புப் பாதுகாப்பையோ (அ) பொது விழாக்களையோ கோராமல் அவர்கள் இருக்க வேண்டும்.
கேசவ் குஹா
நன்றி: https://scroll.in/article/906994/2019-polls-by-making-it-modi-versus-rahul-media-has-created-a-narrative-that-benefits-only-the-pm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக