என் மகன் உயிரிழப்பில் சந்தேகம்".. எச்ஐவி பாதிப்பு ரத்தம் கொடுத்த இளைஞரின் தந்தை வாக்குமூலம் .
tamil.oneindia.com - lakshmi-priya :
மதுரை:
என் மகன் உயிரிழந்ததில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எச்ஐவி பாதிப்பு
ரத்தம் கொடுத்த இளைஞரின் தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
ராமநாதபுரம்
மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் 19 வயது இளைஞர். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள உறவினர் பெண்ணை
பார்க்க வந்தபோது அங்கு ரத்தத்தை தானமாக கொடுத்தார்.
இதையடுத்து
அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாடு செல்வதற்காக தனது ரத்தத்தை
நடைமுறைக்காக பரிசோதனை செய்தார். அப்போது அவரது ரத்தத்தில் எச்ஐவி கிருமி
இருப்பது தெரியவந்தது.
கர்ப்பிணியின் உடல்
இதையடுத்து
அந்த இளைஞர் சிவகங்கை மருத்துவமனைக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்தார்.
ஆனால் அதற்குள் அந்த எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் எந்தவித பரிசோதனையும்
செய்யப்படாமல் கர்ப்பிணியின் உடலில் செலுத்தப்பட்டது.
மன உளைச்சல்
இதனால்
அவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார். தம்மால் ஒருவர் பாதிக்கப்பட்டுவிட்டதை டிவியில்
பார்த்து தெரிந்து கொண்ட அந்த இளைஞர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
அனுமதி
இதையடுத்து
அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அந்த இளைஞர்
மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு
சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் அவர் மதுரை அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.
விஷம்
இந்நிலையில்
இன்று காலை அவர் ரத்த வாந்தி எடுத்ததால் அவர் பலியாகிவிட்டார். இவரது
இறப்பு முழுக்க முழுக்க எலி விஷத்தினால் ஏற்பட்டது என்று மருத்துவர்கள்
தெரிவித்துவிட்டனர்.
கோரிக்கை
இதனிடையே
தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக இளைஞரின் தந்தை போலீஸிடம் புகார் மனு
அளித்துள்ளார். மேலும் தனது மகனின் உடலை மதுரை அரசு மருத்துவர்கள்
அல்லாமல் வேறு மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்
என்றும் பிரேத பரிசோதனையை வீடியோவாக எடுக்க வேண்டும் எனவும் மதுரை
மருத்துவமனை டீனிடம் இளைஞரின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக