வெள்ளி, 4 ஜனவரி, 2019

விஸ்வாசம் , பேட்ட தலைகீழாக மாறிய தியேட்டர் நிலவரம்- கோபத்தில் அஜித் ரசிகர்கள்

வெப்துனியா: வரும் ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு தமிழ் சினிமாவின் இரு உச்ச நட்சத்திரங்களான ரஜினி, அஜித் ஆகியோரின் படங்களான பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியாக் இருக்கின்றன
;அஜித்தின் விஸ்வாசம் படம் சென்ற தீபாவளிக்கே ரிலிஸ் ஆவதாக இருந்து பின்னர் சில பல பிரச்சனைகளால் பொங்கலுக்கு ரிலிஸாவதாக ஆறு மாதத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.
சாதாரண நாட்களில் ரிலிசானாலே அஜித் படத்திற்கான ஓபனிங் வேறு லெவலில் இருக்கும், பொங்கல் விடுமுறையில் சொல்லவா வேண்டும் என விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் அட்வான்ஸ் கொடுத்து விஸ்வாசம் படத்தைப் புக் செய்துகொண்டனர்.
ஆனால் இடையில் திடீர் திருப்பமாக ரஜினியின் பேட்ட படமும் பொங்கல் வெளியிட்டீல் குறுக்கிட்டதால், தியேட்டர்கள் பற்றாக்குறை ஏற்படும் என விநியோகஸ்தர்கள் பயந்தனர். ஆனால் இரு படத் தயாரிப்புத் தரப்புமே ரிலிஸில் பின்வாங்காமல் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாவதில் உறுதியுடன் நின்றனர்.
</">விஸ்வாசம் படத்திற்கு முன்பே அட்வான்ஸ் கொடுக்கப்பட்டதால் கிட்டதட்ட 70 சதவீதம் தியேட்டர்களில் விஸ்வாசமும் மீதியுள்ள 30 சதவீதம் தியேட்டரில் பேட்ட படமும் வெளியாகும் எனவும் ஆரம்பகாலப் புள்ளி விவரங்கள் தெரிவித்தன. ஆனால் சன்பிக்சர்ஸ் தங்கள் பேட்ட படத்தை அதிகளவில் ரிலிஸ் செய்யவேண்டுமென விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட் மூவிஸுக்கு அளித்தது. இதனால் ரஜினி, சன்பிக்சர்ஸ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரஜினிக்கு இருக்கும் ஆளுங்கட்சி ஆதரவு ஆகியக் காரணங்களால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் சில தியேட்டர்க்ளில் விஸ்வாசத்தை தூக்கிவிட்டு பேட்ட படத்தை ரிலீஸ் செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தமிழக்த்தில் உள்ள தியேட்டர்களில் கிட்டதட்ட 60 சதவீதம் பேட்ட படமும் 40 சதவீதம் விஸ்வாசம் படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாகத் தெரிகிறது.

இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் கோபமடைந்துள்ளதாகவும் மேலும் தங்களின் பலத்தை ஜனவரி 10 ஆம் தேதியன்று தியேட்டர்களில் காட்டவேண்டும் என ஆக்ரோஷமாக உள்ளதாகத் தெரிகிறது..




கருத்துகள் இல்லை: