44 படங்களைத் தவிர்த்து 140 படங்கள் 2018ஆம் ஆண்டில் தோல்வியை தழுவியிருக்கிறது. இவற்றில் சராசரி 3 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 100 படங்கள் மூலம் 300 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது தமிழ் சினிமா. மேற்கண்ட 140 படங்கள் மூலம் வருடந்தோறும் திரைப்பட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது
மின்னம்பலம் :தமிழ் சினிமா 365: பகுதி - 5 இராமானுஜம்
2018-ஆம் ஆண்டில் வெளியான 184 படங்களில் லாபம் அடைந்து வெற்றியைத் தொட்ட திரைப்படங்கள் பற்றிய விவரங்கள் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர்களால், விநியோகஸ்தர்களால் அறிவிக்கப்படவில்லை. உண்மைக்கு நெருக்கமாக இது பற்றிய தகவல்களை இந்த தொடரின் முந்தைய கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறோம்.
தங்களுடைய படம் வெற்றியடைந்து எத்தனை கோடி அல்லது எத்தனை லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது என்பதை இதுவரையிலும் எந்தவொரு படத் தயாரிப்பாளரும் வெளிப்படையாக தமிழ்த் திரையுலகத்தில் கூறியது இல்லை.
திரையுலக வரவு, செலவு கணக்கு மற்ற துறைகளிலிருந்து சற்று வித்தியாசமானது. திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் அதனை திரையரங்குகளுக்குக் கொண்டு செல்லும்போது இடையில் விநியோகஸ்தர், திரையரங்குகள் ஆகிய இரு தரப்பிடம் மட்டுமே வசூல் தொகை விபரத்தை பகிர்ந்து கொள்வார்கள்; வெளிப்படையாக அறிவிக்க மாட்டார்கள். ஆகவே நாமும் சினிமா துறை அனுபவத்தின் அடிப்படையில் அந்தத் திரைப்படம் வெளியான பின்பு பற்றி நமக்குக் கிடைத்த தகவல்களை வைத்து அனுமானத்தின் அடிப்படையில் இந்த வெற்றி, தோல்வி படங்களின் பட்டியலை தயார் செய்துள்ளோம்.
தியேட்டர் கட்டணங்கள் மட்டுமில்லாமல் மற்ற அனைத்துப் பிரிவு விற்பனைகள் மூலம் கிடைத்திருக்கும் பணத்தையும் மனதில் கொண்டு, ‘தயாரிப்புச் செலவைத் தொட்டிருந்தாலே அது வெற்றிப் படம்தான்’ என்கிற மாயவலைக்குள் திரையுலகம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது.
ஏற்கெனவே நாம் பட்டியலிட்ட 44 படங்களைத் தவிர்த்து 140 படங்கள் 2018ஆம் ஆண்டில் தோல்வியை தழுவியிருக்கிறது. இவற்றில் சராசரி 3 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 100 படங்கள் மூலம் 300 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது தமிழ் சினிமா. மேற்கண்ட 140 படங்கள் மூலம் வருடந்தோறும் திரைப்பட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தமிழ் சினிமா பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை இது போன்ற பட்ஜெட் படங்கள் தான் தக்கவைத்து வருகின்றன. பிரம்மாண்டமான பட்ஜெட் படங்கள் மூலம் தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு குறைவான வேலை வாய்ப்புகளே கிடைத்து வருகிறது. தமிழ் சினிமாவில் சிறு பான்மையாக இருப்பவர்களும், எப்போதாவது நடிக்க வரும் ஸ்டார்களும் மேலும் வளமடைவது தொடர்வதும், தமிழ் சினிமா உயிர்ப்புடன் இருக்க மூலதனத்தை இழந்து வருவதுதும் பெரும்பான்மையான தயாரிப்பாளர்களை நஷ்டம் இன்றி காப்பாற்றக் கூடியவையா?
நாளை......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக