ஞாயிறு, 30 டிசம்பர், 2018

பெரியார் கொள்கையை அமுல்படுத்திய காமராஜ் அண்ணா கலைஞர் படங்களை தவிர்த்து பிரபாகரன் படமா?

LR Jagadheesan : நீங்கள் ஏன் தேவையில்லாமல் திடீரென பிரபாகரனை
எதிர்க்கிறீர்கள்? விமர்சிக்கிறீர்கள்?
நானாக எங்கே பிரபாகரனை விமர்சித்தேன்? முதல்முறையாக பல்வேறு பெரியாரிய அமைப்புகள், ஒரே மேடையில் தோன்றி இந்துத்துவ மதவாத அரசியலை எதிர்த்து முழங்குகின்றன. பல்லாயிரம் பேர் திரண்ட பிரம்மாண்ட முன்னெடுப்பு. தமிழ்நாட்டின் அத்தனை பெரியாரிய இயக்கங்கள், ட்டில் நடக்கும் அந்த நிகழ்வில் தமிழக/இந்திய அரசியல் தான் பிரதான இலக்கு பேசுபொருள். உலகிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் ஏழுகோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். அதுவும் பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே நிலப்பரப்பில். இந்த தமிழ்நாட்டுத் தமிழர்களுக்காகத்தான் பெரியார் தன் ஒட்டுமொத்த வாழ்வை ஒப்புக்கொடுத்தார். அவரது அரசியலை கொள்கைகளை சுதந்திர இந்தியாவில் ஆட்சியில் இருந்து நிறைவேற்றியவர்கள் மூன்று முதல்வர்கள். காமராஜர், அண்ணா மற்றும் கலைஞர். அந்த மூவரின் படங்களை தம் மேடையில் வைக்க மறுத்த இந்த விழாவின் ஏற்பாட்டாளர்கள் பிரபாகரனுக்கு எதற்காக கட் அவுட் வைத்தார்கள்? என்பதே என்னுடைய எளிய கேள்வி.
ஆளுமைகள், பெருந்தலைகள் கூடி அடுத்த
தலைமுறை இளைஞர்களுக்கு பெரியாரை, அவரது அரசியலை கடத்தும் ஆனப்பெரிய முயற்சி. கண்டிப்பாக பாராட்டுக்குரியது தான். ஆனால் தமிழ்நா
தமிழ்நாட்டின் ஏழுகோடி தமிழர்களின் எதிர்கால அரசியலுக்கு, முன்னேற்றத்துக்கு பிரபாகரனோ அவர் முன்னெடுத்த அரசியலோ அணுகுமுறையோ எந்த வகையில் பயன்படுமென இந்த பெரியாரியர்களும் கருப்புச்சட்டைக்காரர்களும் நம்புகிறார்கள்? அதை சொல்வதற்கு இந்த பெரியாரியர்களுக்கும் கருஞ்சட்டைக்காரர்களுக்கும் என்ன தயக்கம்? ஏன் இந்த மௌனம்? காரியமவுனமும் கள்ள மவுனமும் எப்போது கருப்புச்சட்டைகளின் அரசியலானது?
பெரியாரியர்களையும் கருப்புச்சட்டைக்காரர்களையும் கேள்வி கேட்க நீங்கள் யார்? நீங்கள் என்ன பெரியாரியரா? கருப்புச்சட்டைக்காரரா?
இரண்டும் இல்லை. அதற்குத்தேவையான வாழ்நாள் முழுமைக்குமான அர்ப்பணிப்போ சுய ஒழுக்கமோ கடைபிடிக்க முடியாது என்பதை நன்கு அறிந்தவன். ஆனால் எதையும் கேள்வி கேளுங்கள் என்று பெரியார் சொன்னார் என்பதை உறுதியாக நம்பும் அரசியல் விமர்சகன்.

கருத்துகள் இல்லை: