திங்கள், 31 டிசம்பர், 2018

அதிமுக கூட்டணியில் ஜி கே வாசன் இணைய முடிவு?

 அ.தி.மு.க., கூட்டணி,இணைகிறது,த.மா.கா.?
தினமலர் :'தி.மு.க., கூட்டணியில், த.மா.கா.,வுக்கு
இடம் இல்லை' என்ற நிலை உருவாகியுள்ளதால், அக்கட்சி, அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைக்க, தயாராகி உள்ளது. முன்னாள் முதல்வர் கலைஞர்  மறைவுக்கு பின், தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப் பேற்றார். அவருக்கு, த.மா.கா., தலைவர், வாசன் வாழ்த்து தெரிவித்தார். அறிவாலயத் தில் நடந்த கலைஞர்  சிலை திறப்பு விழா விற்கு, அழைப்பின்படி, வாசன் பங்கேற்றார். இதனால், தி.மு.க.,வுடன், த.மா.கா., நட்பு கட்சியாக விளங்கி வந்தது.
சமீபத்தில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர்,சென்னை வந்த பின், தி.மு.க., தலைமையின் போக்கில், மாற்றம் உருவாகி உள்ளது. த.மா.கா.,வுடனான உறவில் இருந்து, விலக துவங்கியுள்ளது.


த.மா.கா., தலைவர், வாசனின், 54வது பிறந்த நாள், டிச., 28ல் நடந்தது. வாசனுக்கு,
முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி,மத்திய அமைச்சர், பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரமுகர்கள், வாழ்த்து தெரி வித்தனர்.ஆனால், ஸ்டாலின் மற்றும், தி.மு.க., தரப்பிலிருந்து யாரும் வாழ்த்து தெரிவிக்க வில்லை.

ஸ்டாலின் பிறந்த நாளான,மார்ச்,1ல்,அவருக்கு, வாசன், பூங்கொத்தும், வாழ்த்து கடிதமும் அனுப்பி வைத்தார்; தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தார்.ஆனால், வாசனை, ஸ்டாலின் கண்டு கொள்ளாதது, த.மா.கா.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 'தி.மு.க., கூட்டணியை எதிர்பார்க்க முடியாது  என, த.மா.கா., தொண்டர்களும் கருத துவங்கி உள்ளனர்.

இதற்கிடையே, தி.மு.க., வுக்கு, 'செக்' வைக்கும் வகையில், அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்துள்ளன. முதல்வர் பழனிசாமியை, த.மா.கா., இளைஞரணி மாநில தலைவர், யுவராஜ், சமீபத்தில் சந்தித்து, 'கஜா' புயல் நிவாரண நிதியைவழங்கினார். ஒரு மாதத்திற்கு முன், முதல்வரை, த.மா.கா., மூத்த துணைத் தலைவர், ஞானதேசிகனும் சந்தித்து பேசினார்.இதனால், இது, அ.தி.மு.க., வுடன், த.மா.கா., கூட்டணி அமைக்க, தயாராகி உள்ளதை காட்டுகிறது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில், பெரம்பலுார் தொகுதியில் போட்டியிட, வாசன் விரும்பினார். கருணாநிதி
சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற வாசன், அன்று மாலை, சோனியா, ராகுல் பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு செல்லவில்லை.இந்த தகவலை, காங்., கோஷ்டி தலைவர்கள் சிலர், ராகுலிடம் புகாராக தெரிவித்துள்ளனர்.

மேலும், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு வாசன் வெற்றி பெற்றால், அவருக்கு, மத்திய அமைச்சரவையில் இலாகா தர வேண்டியது வரும் எனவும், அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., வை சேர்ப்பதற்கு, ராகுல் தரப்பில் இருந்து முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான், வாசன் பிறந்த நாளன்று, அவருக்கு, ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.


- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: