மின்னம்பலம் :சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்த ஆண்டில் 2,062 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு நிறைவுறும் நிலையில், இந்த ஆண்டுக்கான ரயில்வே துறையின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ரயில்வே
துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டங்கள், இலக்குகள், செயல்பாடுகள், சாதனைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியாகியுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே ரயில் பெட்டிகள் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு வரும் நிலையில், அதிவேக திறன் கொண்ட (160 கிமீ வேகம்) டிரெயின் 18 ரயில், சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. தண்டவாள இயந்திர உற்பத்தியை மேலும் ஊக்குவிக்க குஜராத் மாநிலத்தில் உற்பத்தி ஆலை ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.
ரயில் பெட்டிகள் உற்பத்தியைப் பொறுத்தவரையில், நடப்பு 2017-18 நிதியாண்டில் மொத்தம் 4,444 ரயில் பெட்டிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதில் நவம்பர் மாதம் வரையில் மட்டும் 3,792 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. அதிகபட்சமாக, சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் இதுவரையில் 2,062 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஐசிஎஃப் ஆலையின் இந்த ஆண்டுக்கான உற்பத்தி இலக்கு 3,156 பெட்டிகளாகும். சென்ற நிதியாண்டில் இங்கு மொத்தம் 2,397 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருந்தன.
இந்த நிதியாண்டின் நவம்பர் வரையிலான மாதங்களில், பஞ்சாப் மாநிலம் கபுர்தலா ஆர்சிஎஃப் தொழிற்சாலையில் 837 பெட்டிகளும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரேபரேலி எம்சிஎஃப் தொழிற்சாலையில் 844 ரயில் பெட்டிகளும், மேற்குவங்க மாநிலத்தின் ஹால்டியா தொழிற்சாலையில் 49 ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக