நாஞ்சில்காரி : :குமரி மாவட்டத்தின் வரலாற்று பார்வை
குமரி மாவட்டத்தின் சாதி கொடுமையும்
இன்றைய கோடாலி காம்பின் கதையும் ..குமரி மாவட்டம் ,செழிப்பான ஒரு மாவட்டம் ,அதன் கடந்த கால வரலாற்றை சற்று புரட்டி பார்த்தோமேயானால் பல சாதீய கொடுமைகளை நடத்தி உயிரோடு மண்ணில் புதைத்த மனித உரத்தில் ,வளர்ந்த செழிப்போ என தோன்றுவதை கடந்த கால வரலாற்றை அறிந்தவர்களால் மறுக்க இயலாது ,கேரளாவை ஒட்டிய மாவட்டம் என்பதினால் ரப்பரும் ,பாக்கும் ,நல்ல மிளகும் செழிப்பாக வளரும் மண் ,அதன் கூடவே கேரளா நம்பூதிரிகளின் சாதிய கொடுமைகளும் இம்மண்ணில் நன்றாக வேர்விட்டு படர்ந்து இருந்தது கேரளத்தில் உள்ள (திருவனந்தபுரம் ) சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமை…!! தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர்…. உள்ளிட்ட “18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்.” சமஸ்தானத்தில் பெரும் எண்ணிக்கையில் இருந்தபோதும் குறைந்த எண்ணிக்கையில் இருந்த நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மற்றும் உயர் சாதி நாயர்கள் பிள்ளைமார் இந்துக்களால் உலகில் மிகவும் கொடுரதனமாகவும் ,கேவலமாக நடத்தபெற்ற வரலாறு இன்றைய இளைய சமுதாயம் அறிந்திருக்க வேண்டும் .அதனால் இந்த பதிவு …!!
அந்த காலத்தில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டால் தெய்வ குற்றம் எனக்கருதி ,தெய்வத்திற்கு வேண்டியவர்களான தாழ்த்தப்பட்ட அடிமைகளை உயிரோடு குளத்தில் உடைப்பெடுத்த இடத்தில போட்டு மூடியிருக்கிறார்கள் !;
;மகாராஜா மார்த்தாண்ட வர்மா காலத்தில் அவருக்கு அரசாங்கத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதற்க்கு தெய்வ குற்றம்என நம்பூதிரி(பார்ப்பனர்கள்) எடுத்து கூறி தெய்வ குற்றத்தை போக்க வேண்டும் எனில் தாழ்த்தப்பட்ட 15 குழந்தைகளை தெய்வத்திற்கு பலி கொடுக்கவேண்டும் என்றார்கள் .
அதன்படி ஒரு மழை நாள் இரவு ஈழவர் சமுதாயத்தை சேர்ந்த 15 குழந்தைகள் திருவனந்த புரத்துக்கு பிடித்து செல்லப்பட்டு ,நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மந்திர ,தந்திர சடங்குகளுக்கு பின் நகரின் நான்கு மூலைகளிலும் உயரோடு புதைக்கபட்டார்கள் !! (அ.கா .பக்கம் .91-92 )
மேலும் எசமானுக்கு உடல் நலம் இல்லை எனில் ஆடு மாடுகளை பலி இடுவதற்கு பதிலாக எல்லா பெரிய கோவில்களிலும் நரபலி கொடுக்க பட்ட கொடுமைகள் கூட நடந்திருக்கிறது !! ( மறுபக்கம் ,ப.69)" ;கொடிய தீமைகளில் பாதிக்க பட்ட ஒரு பிரிவு தான்(சாணார்(நாடார் ) ,முக்குவர், புலையர்……) தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு இருந்தது . உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.</>மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி…
மார்புக்கு (முலை) வரி வசூலிப்பார்கள்…!!மார்பகம் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய மார்பகளென்றால் வரி அதிகம்…!! வரி கட்ட முடியாவிட்டால், இடுக்கியினை ( பனைமரத்து பூவை பத படுத்த பயன்படுத்துவது ) கொண்டு மார்பகங்களை திருகுவார்களாம் …சில இடங்களில் முலைகள் அறுத்து எறியப் பட்டது…!! என்ன கொடுமை இந்த கொடுமை உலகில் நடந்ததுண்டா…?
கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது…!!
சாணார்(நாடார் ),முக்குவர், புலையர்… மக்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது..!! பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது…!! பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும்…!!
;சாணார் (நாடார் ),முக்குவர், புலையர்… … மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது…!!
இன்னும் பாருங்கள் நாகர்கோயில் செல்லும் வழியில் தாளக்குடி எனும் கிராமம். அங்கு சாம்பவர் சாதியைச் சார்ந்த கர்ப்பிணி பெண் மாடத்தியை, மேலாடை அணிந்ததற்காக ஆதிக்கசாதியினர் அடிமையாய் வைத்திருந்தனர். அவரை மாட்டுக்குப் பதிலாய் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுது கொன்றனர். இந்த கொடுமை 19ம் நூற்றாண்டில் நடந்தது…!!
கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத்தில் திருமணமான சில நாட்களில் தாலி, மேலாடையுடன் வந்த பெண் அரசாணையை எதிர்த்த குற்றத்துக்காக பொது இடத்தில் தாலியறுத்து உடை களைந்து அரசுப் படையால் கொலை செய்யப்பட்டார். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது!!
;மேலாடை அணிந்ததற்காக சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள் மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள்…!!
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர்…!!
;இக்கொடுமைகளைக் கண்டதனால் தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்…!!கேரளம் ஒரு பிராந்தாலயம் என்று விவேகானந்தர் குறிப்பிட்டதாக இன்றும் கேரளாவில் கூறுகிறார்கள்
ஐயாபதி வைகுந்தர் எனும் ஒரு சமுதாயம் குமரி மாவட்டத்தில் இன்றும் உண்டு ,அவர் இந்த கொடுமைகளுக்காக கொதித்து எழுந்தார் ,அவர் கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம்,
“மார்பில் ஆடையணியுங்கள்…!!
முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள்….!!
தங்கத்தில் தாலி கட்டுங்கள்….!!
இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள்…!!
கோவில்களை நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள்…!! வணங்குங்கள்” என்றார்.,
ஆனால் இன்று அந்த சமுதாயம் அவரையே கடவுளாக்கி விட்டது ,இன்று இதேபோன்ற வர்ண பாகுபாட்டை ஆளும் பாசிச வாதிகள் இந்தியா முழுவதும் ,ஒரே மொழி ஒரே மதம் என்ற பெயருடன் வந்திருக்கிறது ,
எந்த சமுதாயம் எதற்கு எதிராக போராடியதோ அந்த சமுதாயத்தை தனக்கு ஆதரவாக ஆக்கி பொது எதிரியாக இஸ்லாமியர்களை காண்பித்து அவர்களின் வாக்குகளை பெற்று குமரிமாவட்டத்தில் தனது எம்பி பயணத்தை தொடங்கியது ,எவர் வென்றாரோ அவரின் முன்னோர்களும் பண்டைய சாதி கொடுமையில் தப்பவில்லை ,
இன்றும் தப்பவில்லை ,மரத்தை வெட்ட உதவிய கோடாலி காம்பின் நினைவு வருவதை தடுக்க இயலவில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக