மாலைமலர் :சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ்
உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை சுமார் 7 மணி முதல்
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர்
இளவரசியின் மகள் கிருஷ்னபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக்
இல்லம் மற்றும் மன்னார் குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லத்திலும்
சோதனை நடைபெற்று வருகிறது.
ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சசிகலா ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி
தினகரன் இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டன. சசிகலா குடும்பத்தினர்
மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
சுமார் 1800 அதிகாரிகள் மொத்தமாக இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக
கூறப்பட்டது./
இரண்டாவது நாளாக இன்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள டி.டி.வி தினகரன் சகோதரர் பாஸ்கரன் இல்லத்தில் இருந்து 7 கிலோ அளவில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்ததற்கான ஆவணங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெயா டி.வி அலுவலகத்திற்கு கூடுதல் அதிகாரிகள் இன்று மாலை வருகை தந்து சோதனை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக