minnambalam :கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கான மாதவிடாய் கால அவசர உதவிக்காக ‘ஷி பேடு’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தானியங்கி நாப்கின் மிஷின்களைப் பள்ளிகளில் நிறுவும் திட்டத்தை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .மாணவிகள் மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவர்.
முதல் கட்டமாக 300 பள்ளிகளில் இந்தத் திட்டம் அடுத்த ஆண்டுக்குள் மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவிகள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களும் இந்தத் திட்டத்தின்மூலம் பயன் பெறுவர். இத்திட்டத்திற்காக கேரள மாநில மகளிர் மேம்பாட்டுக் கழகம் ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மாதவிடாய் சுகாதாரம் என்பது, ஒவ்வொரு பெண்ணின் உரிமை என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்குவது மட்டுமே இந்தத் திட்டத்தின் நோக்கம்இல்லை எனக் குறிப்பிட்டுள்ள பினராயி, மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
கேரள அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. சமீபத்தில் கேரளாவில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சில நிர்வாகப் பணிகளுக்கு பெண்களைப் பணியமர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக