thetimestamil :நாளை 07/11/2017 தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிபுறக்கணிப்பு செய்ய அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை பெருமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. திருநெல்வேலி மாறன்குளம் வழக்கறிஞர் இராஜரத்தினம் @ செம்மணி அவர்கள் தனது கட்சிக்கார் ஒருவரது புகாரை பெற மறுத்த போலீசார் மீது நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார் இவர். அதனால், 3/11/17 இரவு வீட்டில் இருந்த அவரை குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்லதுரை, பலவந்தமாக வெளியே இழுத்துள்ளார். ராதாபுரம் உதவி ஆய்வாளர் பழனி, பழவூர் உதவி ஆய்வாளர்கள் விமலகுமார், முகமது சம்சீர், சிறப்பு பிரிவு காவலர்கள் ஜோஸ் , சாகர் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.
கை,கால்களை ஒன்றாக இருக்கி கட்டி உடலை வில் போல் வளைத்து, இரும்பு பைப், லத்தி, ஆகியவற்றால் அடித்து , பூட்ஸ் காலால் மிதித்ததால் இடது கால் பாதம், வலது பெருவிரல் ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இரண்டு கால் மூட்டுகளிலும் கன்றிய காயம், உடல் முழுக்க வீக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு வழக்கில் பொய்யாக செம்மணியை சேர்க்க டி.எஸ்.பி. முயற்சி செய்துள்ளார். எஸ்.பி ஒத்துக்கொள்ளவில்லை.
தற்போது செம்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பத்திரிகை செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக