தினத்தந்தி :சென்னை,
கடலூரில் உள்ள வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.5 அடி. இந்நிலையில் இதன் நீர்மட்டம் 45 அடியை எட்டியது. தொடர்ந்து ஏரிக்கு 1,400 கனஅடி நீர்வரத்து உள்ளது.
இதனால் சென்னைக்கு 60 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நீர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும். 2 ஆண்டுகளுக்கு பின் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு நீர்திறக்கப்பட்டு உள்ளது.<
திருவாரூர்,தமிழகத்தில்
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் இறுதியில் தொடங்கி தொடர்ந்து மழை பெய்து
வருகிறது. கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல நீர்நிலைகள்
நிரம்பின. வெள்ளத்தினால் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வாகனங்கள்
செல்ல முடியவில்லை. இதனால் பல மாவட்டங்களில்
இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
கனமழையினால்
பள்ளி செல்லும் மாணவ மாணவியர் கடந்த ஒரு வாரம் சிரமமடைந்தனர். அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பும் வெளியானது.
இந்நிலையில்
திருவாரூரில் இன்று கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து திருவாரூரிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
திருவாரூர்,
நன்னிலம், குடவாசல், மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து
வருகிறது. கனமழையால் 60 ஆயிரம் ஏக்கருக்கும்
மேற்பட்ட பாசன நிலங்களில் நீர்தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக