Lakshmi Priya
= Oneindia Tamil :
சென்னை: திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியுடனான பிரதமர் மோடியின் சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பெரம்பூரில் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
எங்கே கமிஷன் வாங்கலாம் என்பதிலேயே அமைச்சர்கள் கவனமாக உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு விரும்பவில்லை. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.450 கோடி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
நிர்வாக ரீதியில் தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்திருந்தால் வெள்ள பாதிப்பு ஓரளவுக்கு குறைந்திருக்கும். கடம்பூர் ராஜூவும், கருப்பண்ணனும் அமைச்சர்களாக இருக்கிறார்களா. பொழுதுபோக்கிற்காக நான் ஷார்ஜா செல்லவில்லை. கார்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றார் ஸ்டாலின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக