தினமலர் :
சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மொத்தம் 187 இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் தலைமை செயலர், ராமமோகன் ராவ் வீட்டில் சோதனைக்கு போன போது, மத்திய படையுடன் சென்ற வரித்துறையினர், தமிழகம் முழுவதும், சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களது நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்கு, போலீஸ் பாதுகாப்பை தான் நாடினர். மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழ்நாடு முழுவதும் நடக்கும் சோதனைக்கு, தேவையான மத்திய வீரர்களை பெறுவதற்கு, கால அவகாசம் கிடைக்காததால், தமிழக போலீசாரின் உதவியை நாடினர்.
இது தொடர்பாக, தமிழக டி.ஜி.பி.,யுடன் பேசி, பாதுகாப்பு கேட்டுள்ளனர். அப்போது, 'ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று, வரித்துறை கூறியுள்ளது. ஆனாலும், எப்படியோ, தினகரன் தரப்புக்கு ரகசியம் கசிந்துள்ளது. சில இடங்களில், போலீசார் முறையாக ஒத்துழைக்கவில்லை என்கின்றனர், வரித்துறையினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக