NDTV :பிரபல ஒளிப்பதிவாளர் பிரியன் இன்று (நவம்பர் 9-ஆம் தேதி) காலமானார்.
விருதுநகரில் பிறந்த பிரியன் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவிடம் சில
படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பின், 1995-ஆம் ஆண்டு
வெளியான ‘தொட்டாச்சிணுங்கி’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
இதனையடுத்து ‘பொற்காலம், தெனாலி, வல்லவன்’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு
ஒளிப்பதிவு செய்தவர் பிரியன்.
இயக்குநர் ஹரியின் ‘வேங்கை’ தவிர்த்து, மற்ற அனைத்து படங்களுக்கும் பிரியன்
தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, ஹரி இயக்கி வரும் விக்ரமின் ‘சாமி
2’ படத்தில் பிரியன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். 55 வயதான
பிரியனுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். இவரது
மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக