செவ்வாய், 7 நவம்பர், 2017

குஷ்பு மருத்துவ மனையில் இருந்து உருக்கமான செய்தி ... youtube


நக்கீரன் : தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும் என நடிகை குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 நடிகையும், கங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவிற்கு, சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடித்து ஓய்வில் உள்ள அவர் தற்போது காணொளி பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘எனது உடல்நலன் குறித்து மிகுந்த அக்கறையுடனும், பாசத்துடனும் வாழ்த்திய அனைவருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு பதிலாக நான் என்ன செய்யமுடியும் என்று தெரியவில்லை. எனக்கு அறுவைச் சிகிச்சை முடிந்துவிட்டது. இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்கப் போகிறேன். இருந்தாலும் நான் உங்களோடு சமூக வலைதளங்களின் வாயிலாக அவ்வப்போது தொடர்பில் இருப்பேன். என்னால் உங்களை விட்டு வெகுநாட்கள் பிரிந்து இருக்க முடியாது என்பதால் கூடிய விரைவில் திரும்பிவருவேன்.
நான் முடித்துக் கொள்வதற்கு முன்பாக ஒன்றே ஒன்றை சொல்ல கடமைப் பட்டுள்ளேன். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களுக்கு முடிந்தமட்டும் உதவ முயற்சிப்போம். ஒவ்வொரு துளியும் கடலை உருவாக்கும். நாம் கடலாக இல்லாவிட்டாலும், துளியாக இருப்போம். மழை பாதிப்புகளால் இன்னல்களைச் சந்திப்பவர்களுக்கு உதவுங்கள். ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின் போதும், நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக இருக்க கடமைப்பட்டுள்ளோம். நாம் மீண்டும் நம் ஒற்றுமையைக் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் நம் ஒற்றுமையையும், வலிமையையும் நம்புங்கள். தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் என்கிற வகையில், நாம் அதை எண்ணி பெருமைகொள்ள வேண்டும். தமிழன்டா..’ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: