Shyamsundar - Oneindia Tamil
: பெங்களூர்: கர்நாடகாவில் வாதி என்ற ரயில் நிலையத்தில் இருந்த டீசல் ரயில்
எஞ்சின் ஒன்று தொழிலாளி செய்த தவறு காரணமாக தானாக ஓட ஆரம்பித்து
இருக்கிறது.
முதலில் மெதுவாக சென்ற இந்த ரயில் எஞ்சின் போக போக வேகம் எடுக்க ஆரம்பித்து
இருக்கிறது. மேலும் இந்த ரயில் எஞ்சின் மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும்
பல ரயில் நிலையங்களை வேறு கடந்து சென்று இருக்கிறது.
இந்த ரயில் எஞ்சினை வேகமாக பைக்கில் துரத்தி சென்ற ஓட்டுநர் பல கிமீ
பயணித்த பின் ஒருவழியாக சாகசம் செய்து ரயில் எஞ்சினை நிறுத்தினார்.
தானாக சென்ற ரயில்
தானாக சென்ற ரயில்
கர்நாடகாவில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான குல்பர்கா மாவட்டத்திலுள்ள
'வாடி' என்ற ரயில் நிலையத்தில் இன்று ஒரு டீசல் ரயில் எஞ்சின் சுத்தம்
செய்யப்பட்டு வந்தது. மும்பை செல்வதற்காக அந்த ரயில் தயார் செய்யப்பட்டு
வந்தது. எஞ்சின் முழுக்க டீசல் நிரப்பி தயாராக இருந்த அந்த ரயில் எஞ்சின்
தொழிலாளி செய்த தவறு காரணமாக தானாக டிரைவர் இல்லாமலே ஓட ஆரம்பித்தது.
மிகவும் வேகமாக சென்றது
மிகவும் வேகமாக சென்றது
முதலில் இந்த ரயில் எஞ்சின் மெதுவாக சென்று இருக்கிறது. ஆனால் டீசல்
எஞ்சின் என்பதால் ஏதோ தவறு ஏற்பட்டு தானாக வேகம் எடுத்து இருக்கிறது. இதன்
காரணமாக அந்த ரயில் எஞ்சினை பிடிப்பது மிகவும் சிரமமாக இருந்திருக்கிறது.
இந்த ரயிலை துரத்திக் கொண்டு ரயில் டிரைவர் வேகமாக பைக்கில் பின்னாடியே
சென்று இருக்கிறார்.
ரயில் நிறுத்தப்பட்டது
ரயில் நிறுத்தப்பட்டது
இந்த நிலையில் அந்த ரயில் எஞ்சின் 13 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம்
பயணித்து இருக்கிறது.
மேலும் பல முக்கியமான ரயில் நிலையங்களை இந்த ரயில்
எஞ்சின் தாண்டி சென்று இருக்கிறது. கடைசியில் ரயில் டிரைவர் பைக்கில்
சென்று அந்த இன்ஜினில் தாவி குதித்து இருக்கிறார். பின் உள்ளே சென்று ரயில்
எஞ்சினை நிறுத்தினார்.
யாருக்கும் பாதிப்பு இல்லை
யாருக்கும் பாதிப்பு இல்லை
இந்த ரயில் சென்ற பாதைகள் அனைத்தும் சரியாக தகவல் தெரிவிக்கப்பட்டு சரி
செய்யப்பட்டது. இதன் காரணமாக இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த
நிலையில் இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என ரயில்வே
நிர்வாகம் கூறி இருக்கிறது
/tamil.oneindia.com
/tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக