ஞாயிறு, 5 நவம்பர், 2017

ஷாலின்: பிரமாண்ட இயக்குனர் பன்சாலியா ? சங்கரா ? பெரிது எல்லாமே அழகு கிடையாதே?

Shalin maria lawrence : சங்கரை பிரமாண்ட இயக்குனர்
என்று ஒரு போதும் ஒத்து கொள்ள மாட்டேன் .என்னை பொறுத்தவரை இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிதான் .
சங்கரின் பிரமாண்ட படங்கள் omr ரோட்டுலுள்ள மிக பெரிய கட்டிடத்திற்கு ஒப்பானவை .Its just steel and concrete .மாறாக பன்சாலியின் படங்கள் ஒரு அழகிய அரண்மனைக்கு ஒப்பாயிருக்கிறது .
பெரிது எல்லாமே அழகு கிடையாதே ....
என்னை பொறுத்தவரையில் பிரமாண்டம் என்பது ஒரு காட்சி என்னை வாயை பிளந்து ஆ வென பார்க்க வைக்க வேண்டும் .அந்த காட்சி என்னை வேறொரு உலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் .Teleportation போல் . அந்த பிரமாண்டம் நடிகர்களின் முக பாவனையில் தெரிய வேண்டும் .திரைக்கதையில் தெரிய வேண்டும் .கதையின் பரிமாணத்தில் தெரிய வேண்டும் .

சங்கரின் படங்கள் கோடி ரூபாயில் வீட்டை கட்டு அதனுள் பொம்மைகளை வைத்ததுபோல் இருக்கிறது .பன்சாலியின் படங்களில் நடிக்கும் நடிகர்கள் மட்டும் உயிர்ப்புடன் இருபதில்லை மாறாக அந்த காட்சியில் இருக்கும் ஒரு கூஜா,திரைசீலை கூட உயிர்ப்புடன் இருக்கிறது .
அவை என்னோடு பேசுகின்றன ,என்னை ஒரு மாய உலகத்திற்கு அழைத்து செல்லுகிறது .
சவுல் என்று சொல்லப்படும் ஐம்பதிர்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் , கழிப்பறை வசதிகள் இல்லாத குருவி கூட்டு வீட்டில் வாழ்ந்த பன்சாலி கட்டிய கனவு மாளிகைத்தான் அவரின் பிரமாண்ட அழகோவிய சினிமா . தீப்பெட்டி வீடுகளில் கைகள் கட்டிப்போட்ட நிலையில் இருந்த பன்சாலி அழகாய் தன் கைகளை விரித்து தன் உடம்பை தளர்த்தி கொண்டதின் பிரதிபலிப்பு தான் வரின் சினிமா .
சங்கரை பொறுத்தவரை அவரின்
சங்கரை பொறுத்தவரை அவரின் mediocre directing skills அதாவது மிகவும் சாதாரணமான இயக்க திறமைக்கு பூச்சு வேலை தான் அவரின் பிரமாண்டம் . சாதாரண உணவை செய்துவிட்டு அதன் மேல் முந்திரி நெய் தூவி அதை உயர்ந்த பண்டமாக மற்றும் நுட்பம் .
சங்கர் வெளிநாட்டு படங்களின் சாயல் படங்களை இங்கே கொடுக்கிறார் . அவர் எடுத்த படங்களை போல் ஹாலிவுட்டில் 100 படமாவது இருக்கும் . அவர் ஒரு xerox கடை வைத்திருப்பவர் .
பன்சாலி ஒரு அகழ்வாராய்ச்சியாளர் .மறைந்து போன இந்தியாவின் வரலாற்றை ,அழகியலை ,இந்த நாட்டில் ஒரு காலத்தில் இருந்த வளங்களை தோண்டி எடுத்து அதை சுத்தம் செய்து ,பளபள வாக்கி அதை ஒரு சிவப்பு நிற வெல்வெட் துணியில் பொதிந்து காட்சிக்கு வைக்கிறார் . பன்சாலியின் படத்தை ஹாலிவுட் இயக்குனர்கள் எடுக்க முயற்சி செய்ய கூட மாட்டார்கள் .அது இந்தியாவின் படம் . காவிரியை போல் ஒரு ஆறு அமெரிக்காவில் இருக்காது . அது போன்றது அவர் படங்கள் .
பிகு : சங்கர் வெறியர்கள் மாற்று பாதையில் செல்லவும் .
ஷாலின்

கருத்துகள் இல்லை: