வியாழன், 9 நவம்பர், 2017

தினமலர் : தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உடைகிறது.

தமிழகத்தில்,தி.மு.க., - காங்., கூட்டணி,உடைகிறது!
தமிழகத்தில்,தி.மு.க., - காங்., கூட்டணி,உடைகிறது! தமிழகத்தில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உடைகிறது. இதுவரை, ஒன்றாக இருந்தவர்கள், மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை, நேற்று தனித்தனியாக நடத்தினர். நாடு முழுவதும், காங்., கூட்டணி கட்சிகள், ஒன்றாக போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும், பிரதமர் மோடியின் சாணக்கியத்தனத்தால், இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.பிரதமர் மோடி, 2016 நவ., 8ல், 'பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, அறிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை துவங்கி, நேற்று ஓராண்டு நிறைவு பெறுவதால், நாடு முழுவதும், கறுப்பு தினம் கடைபிடிக்க, காங்கிரஸ் முடிவு செய்தது. அதற்கு, அதன் கூட்டணியில் உள்ள, தி.மு.க., உள்ளிட்ட, 18 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தமிழகத்திலும், தி.மு.க.,வும், காங்கிரசும் இணைந்து, கறுப்பு சட்டை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை, தமிழக காங்., தலைவர், திருநாவுக்கரசரும் உறுதி செய்திருந்தார்.

நம்ப முடியாது:


இதற்கிடையில், 6ம் தேதி,சென்னை வந்த பிரதமர் மோடி, திடீரென, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். இந்த சந்திப்பும், மோடியின் சாணக்கியத்தனமும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்குள் அதிர்வை ஏற்படுத்தி விட்டது.'இது, மரியாதை நிமித்த மான சந்திப்பு' என, தி.மு.க., தரப்பில், திரும்ப திரும்ப கூறப்பட்டாலும், காங்கிரசார், அதை நம்ப தயாராக இல்லை.

அதற்கேற்ப, தமிழக, பா.ஜ.,தலைவர்களும், 'இந்த சந்திப்புக்கு பின்னால், அரசியல் இல்லா மல் இல்லை' என்ற கருத்தை, கொளுத்தி போட்ட தால், தி.மு.க., மீதான சந்தேகம், காங்கிரசுக்கு வலுத்து விட்டது. இதற்கிடையில், 'பா.ஜ., தீண்டத்தகாத கட்சி அல்ல' என, தி.மு.க., முன்னாள் அமைச்சர், துரைமுருகன் கூறியதும், பிரதமரையும், மத்திய அரசையும் வெகுவாக பாராட்டி, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி எழுதிய கடிதமும், காங்கிரசின் போக்கை திசை திருப்பி விட்டது. அதன் வெளிப்பாடு தான், தனித்து போராட்டம் என்கிறது காங்கிரசின் தலைமை வட்டாரம்.

தமிழகம் முழுவதும், தி.மு.க., நடத்திய ஆர்ப் பாட்டத்தில், காங்., கோஷ்டி தலைவர்களோ, இரண்டாம் கட்டத் தலைவர் களோ, மாவட்ட தலைவர்களோ பங்கேற்க வில்லை. அதற்கு பதிலாக, காங்கிரசார், மாவட்ட வாரியாக, தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல், காங்கிரசார் நடத்திய போராட்டத்தில், தி.மு.க.,வினரும் பங்கேற்கவில்லை.< கேள்வி:


திண்டுக்கல்லில், மணிக்கூண்டு அருகில் காலையில், தி.மு.க., சார்பில் போராட்டம் நடந்தது. அதே இடத்தில், மாலை யில், காங்கிரசார் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஒன்றாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழகத்தில் மட்டும், இப்படி எல்லா மாவட்டங்களிலும், இரு கட்சியினரும் தனித்து செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில், கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர், திருநாவுக்கரசர் பேசுகையில், ''சமீபத்தில், சென்னை வந்த பிரதமர் மோடி, தி.மு.க., தலைவர், கருணாநிதியை பார்த்து, உடல் நலம் விசாரித்துள்ளார்.

''கருணாநிதி, மூன்று ஆண்டுகளாக, நோய் வாய்ப்பட்டு, வீட்டில் இருக்கிறார். அப்போதெல்லாம் சென்னை வந்த மோடி, ஏன் கருணாநிதியை சந்திக்கவில்லை?'' என, கேள்வி எழுப்பினார்.

இது குறித்து, தி.மு.க., அமைப்புச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யு மான, டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், ''கருணாநிதியை, பிரதமர் மோடி, மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதில், எந்த அரசியலும் இல்லை. ''உடல் நலம் குறித்து தான், மோடி விசாரித் தாரே தவிர, அங்கு அரசியல் பேசவில்லை. ஏற்கனவே, அக்., 22ல், டில்லியில், காங்., துணை தலைவர், ராகுல் தலைமையில் நடந்த, எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் தான், தி.மு.க., போராட்டம் நடத்தியது,'' என்றார்.

கருத்துகள் இல்லை: