சமயம். :செவ்வாய் கிரகத்தில் பிறந்த அதிசய பிறவி.!
ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பூமியில் பிறப்பதற்கு முன்பு தான் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாக கூறியுள்ளது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்யா, வோல்கோகிராடைச் சேர்ந்த 20 வயது இளைஞர், போரிஸ்கா. இவர்தான் இந்த வியத்தகு செய்தியை உலகுக்கு அளித்துள்ளார். போரிஸ்கா, பிறந்த சில மாதங்களிலேயே பேசத் தொடங்கி விட்டதாகவும், இரண்டு வயதிலேயே எழுதப் படிக்க பழகிக் கொண்டதாகவும், கடினமான விஷயங்களை விவாதிக்கும் திறனை சிறுவயதிலேயே பெற்றிருந்ததாகவும் இவருடைய பெற்றோர் கூறுகின்றனர்.
மேலும், போரிஸ்கா, வேற்று கிரக வாசிகள் குறித்தும் பல வியத்தகு விவரங்களை கூறி வருகிறார். விஞ்ஞானிகள் போரிஸ்காவை அணுகி அவருடன் வேற்று கிரக வாசிகளின் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக