சனி, 11 நவம்பர், 2017

ஏமன் மீது சவூதி அரேபியா போர் ,,, ஆயுத வியாபாரிகள் காட்டில் மழை

Chinniah Kasi : ஆயுத வியாபாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரியாத், நவ.10 -
ஏமன் மீது சவூதி அரேபியா நடத்தி வரும் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் ஆயுத வியாபாரத்தில் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளனர். ஏமன் நாட்டில் அந்நாட்டு ஜனாதிபதி அப்ரப்பு ஹாதிக்கு எதிராகக் கலகம்நடைபெற்றது. கலகக்காரர் களின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாத அவர் சவூதிஅரேபியாவுக்கு ஓடிப்போய் அங்கு தஞ்சமடைந்தார். அவர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு செல்லப் பிள்ளை யாக இருந்து வந்ததால், கலகக்காரர்களைத் தாக்கி அவர்கள் பிடியிலிருந்து ஏமனை மீட்குமாறு சவூதி அரேபியாவைத் தூண்டிவிட்டனர். தங்கள் படைகளையும் அனுப்பி வைப்பதாக உறுதியளித்த அமெரிக்கா, தாக்கு தலுக்கான ஒட்டுமொத்த செலவை சவூதி அரேபியா வின் தலையில் ஏற்றியது. மேலும், இந்தப் போரை ஆயுத ஏற்றுமதிக்கும் பயன்படுத்திக் கொண்டி ருக்கிறது.

பெருகும் விற்பனை
அமெரிக்காவின் கூட்டாளியான பிரிட்டனும் பெரும் அளவில் பல னடைந்திருக்கிறது என்று தற்போது வெளியாகியுள்ள செய்திகள் அம்பலப்படுத்து கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை சவூதி அரேபியா பிரிட்டனிடமிருந்து வாங்கியிருக் கிறது. சில ஆண்டு களிலேயே 457 சதவிகிதம் அளவுக்கு ஆயுத விற்பனை அதிகரித்துள்ளது. ஏமனு டனான தங்கள் எல்லைகளை சவூதி அரேபியா மூடப் போவதாக அறிவித்துள்ள நிலையில்தான் இந்தத்தகவல்கள் வெளியாகி யுள்ளன. ஏமன் நாட்டின் கல கக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகச் சொல்லிக் கொண்டு, முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரி விக்காததால், அப்பாவி மக்கள் மீதும் அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதல் நடத்துகின்றன என்று ஏமன் நிர்வாகம் கூறியுள்ளது.
ஏமனில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஆய்வு செய்துள்ள ஆயுத விற்பனைக்கு எதிரான பிரச்சார அமைப்பு, “அப்பாவி மக்கள் கொடூரமான முறையில் தாக்கப்படு கிறார்கள். தாங்கள் என்ன விற்பனை செய்கிறோம் என்பதைக் கூட பிரிட்டன் நினைத்துப் பார்ப்பதில்லை. அவர்கள் கவனம் முழுவதும்லாபத்தைச் சம்பாதிப்ப திலேயே உள்ளது” என்று கூறியுள்ளது. இதுவரையில் சவூதி அரேபியா நடத்திய தாக்குதல்களில் ஏமனின் அப்பாவி மக்கள் 10 ஆயிரம்பேர் கொலை செய்யப்பட்டி ருக்கிறார்கள். 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா ஆதரவுடன் நடக்கும் இந்தக் கொலை வெறித்தாக்குதல்களால் ஏமனின் 70 சதவிகித மக்கள் அவசர நிவாரண உதவி தேவைப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அப்பாவிக் குழந்தைகள் கொலை
அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உதவியால் நடைபெறும் இந்தத் தாக்கு தல்களுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அப்பாவிக் குழந்தைகளைக் கொன்று குவிப்பதோடு, கடுமையான நோய்களை யும் பரப்பும் வேலையைச் செய்கிறார்கள். இவர்களின் தாக்குதல்களால் ஏற்படும் விளைவுகளுக்குப் பொறுப்பேற்காமல், அதற்கு ஈரான்தான் காரணம் என்று பழி போட முயற்சிக்கிறார்கள் என்கிறார் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஜாரிப். ஆயுத வியா பாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் போர் வெறியாட்டம் நிறுத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: