செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

திருச்சி :2 மகன்களை கொன்று தாய் தற்.....கொலை???



 திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சின்னமனைப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (40). கொத்தனார். இவரது மனைவி லட்சுமி (33) இவர்களுக்கு திமண மாகி தேவராஜ் (11) அன் புராஜ் (8) ஆகிய இரு மகன்கள் உள்ள்னர்.

தேவராஜ் 6ம் வகுப்பும் அன்புராஜ் 3ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை குழந்தைகளை கிருஷ்ணன் அடித்துள்ளார். இதைப்பார்த்த லட்சுமி, கண வனை கண்டித்தார். இதில் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து கிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். மாலையில் மீண்டும் வந்தபோது மனைவி, குழந்தைகளை காணவில்லை.
மனைவி வ கோபித்துக் கொண்டு, கொடும்பாளூர் அடுத்த இடையப்பட்டி பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றிருப்பார் என கருதி அங்க சென்று விசாரித்தார். ஆனால் அங்கும் வர வில்லை. இதனையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே ஆத்திரத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருதி வயல் வெளியில் தேடினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர்களுக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றிலேயே கிருஷ்ணனின் இளைய மகன் அன்புராஜின் உடல் மிதந்தது. அவனது உடலை மீட்டபோது உடலில் கல்லைக் கட்டி தள்ளியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அனை வரும் அந்த கிணற்றில் தான் விழுந்திருக்க வேண் டும் என கருதி, கிணற்றில் தேடினர். அப்போது லட்சுமி மற்றும் மற்றொரு மகனின் உடலும் கற்களை வயிற்றில் கட்டிய நிலையில் கிணற்றுக்குள் கிடந்தன.
இதற்கிடையே போலீ சுக்கு தெரியாமல் உடலை எரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

இச்சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து போலீசார் கணவர் கிருஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: