புதன், 17 ஆகஸ்ட், 2011

தடை சிங்களவர்களை விட இந்தியர்களிற்கு பாதிப்பு-சீனாவுக்கு இலாபம்

பொருளாதாரத் தடை இலங்கை மீது விதிக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் கோருவது சிங்களவர்களை விட இந்தியர்களிற்கு அதிகம் பாதிப்பு-ஹிந்து வர்த்தகச் சஞ்சிகை ஆராய்ந்துள்ளது!



பொருளாதாரத் தடை இலங்கை மீது விதிக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் கோருவது சிங்களவர்களை விட இந்தியர்களிற்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்து, ஹிந்து பத்திரிகையின் வர்த்தகச் சஞ்சிகை அதற்கான காரண காரியங்களை ஆராய்ந்துள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இருமுறை விடுக்கப்பட்ட வேண்டுகோளை இந்தியா தவிர்த்ததைக் காரணமாக வைத்து சீனா அந்தத் துறைமுக அபிவிருத்திப் பணியை கையகப்படுத்தி இன்று இந்தியாவிற்கெதிரான ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ளது எனவும்,

தற்போது இந்தியா இலங்கைக்கு இடையில் அமுலிலுள்ள வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்குச் சாதகமானதொரு ஒப்பந்தமெனவும் எனவே பொருளாதாரத் தடை விதிக்கப்படுதல் என்பது ஒரு முட்டாள்தனமான காரியம் என்றும் அந்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக 2010ம் ஆண்டின் தரவுகளின் படி இந்தியா இலங்கைக்கு 2,460 மில்லியன் டொலர்களிற்கு வருடாந்தம் ஏற்றுமதி செய்கிறது எனவும் ஆனால் இலங்கையிலிருந்து வெறும் 470 மில்லியன் டொலர்களிற்கு இறக்குமதியை மேற்கொள்கிறது எனவும் பொருளாதாரத் தடை ஏற்படுத்தப்பட வேண்டுமானல் இந்தியா 2,000 மில்லியன் (இரண்டு பில்லியன்) டொலர்களை இழக்கும் எனவும் எனவே பொருளாதாரத் தடை சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளதோடு,

எவ்வளவுக்கெவ்வளவு இலங்கையுடன் இந்தியா நெருக்கமாகச் செயற்படுகிறதோ அவ்வளவிற்கு அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றும் அதன் மூலம் தமிழர்களிற்கான பிரச்சினைகளிற்குத் தீர்வு காணப்படலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: