செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

2, 3 வருடங்களில் ஆட்சியை கைப்பற்றுவோம் - ரணில் சொல்வீச்சு


இன்னும் 2, 3 வருடங்களில் ஆட்சியை கைப்பற்றுவோம் - ரணில் சொல்வீச்சுஇன்னும் இரண்டு மூன்று வருடங்களில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றுமென அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2009ல் ஐக்கிய தேசியக் கட்சியை முன்னோக்கிய பாதைக்கு இட்டுச் சென்றதுபோல எதிர்காலத்திலும் செயற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-
"ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை கூடவுள்ளது. வேட்புமனு குழுவின் மூலம் வேட்பாளர்களை தெரிவுசெய்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆராயவுள்ளோம். மீள்கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கும் நாளை அனுமதி அளிக்கப்படவுள்ளது. அதை மட்டுமே நாங்கள் செய்வோம்.
சிறிய காலத்தை வைத்துக் கொண்டு வேட்பு மனு சபையை நாளை நிறுவ முடியாது. அப்படி செய்தால் மஹிந்த ராஜபக்ஷ்வே அதன்மூலம் நன்மையடைவார். நாங்கள் கூடி கட்சி யாப்புக்கு அமைய செயற்படவுள்ளோம்.

எனவே யாரையும் நாளை கொழும்புக்கு வருமாறு நாம் அழைப்பு விடுக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி சத்தியாக்கிரகம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி சத்தியாக்கிரகம் எதனையும் ஏற்பாடு செய்து மக்களை கஸ்டத்திற்கு உட்படுத்த விரும்பவில்லை.

2009ம் ஆண்டு நான் இந்தக் கட்சியை முன்கொண்டு வந்தேன். அதேபோல் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் நாம் ஆட்சி அதிகாரத்திற்கு வருவோம். அதற்காகவே நாம் தயாராகிறோம். மக்களின் பிரச்சினையை தீர்க்க இந்த அரசாங்கத்திற்கு முடியாது. இது ஒருகட்சி சார்பாக செயற்படும் அரசாங்கம்". என்றார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க.

கருத்துகள் இல்லை: