தடை உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்ட அண்ணா ஹசாரே தற்போது போலீஸ் காவலில் உள்ளார். அங்கு அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு தில்லியில் உள்ள போலீஸ் அலுவலகத்துக்கு ஹசாரே கொண்டுசெல்லப்பட்டார். அப்போதிலிருந்து அவர் தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவரது குழுவினர் தெரிவித்தனர்
ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா கோரி ஹசாரே இன்று முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஹசாரே அறிவித்திருந்தார். எனினும் இன்று காலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் அரவிந்த் கேஜ்ரிவல், கிரண் பேடி மற்றும் சாந்தி பூஷண் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக