செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

78 ஓட்டங்களால் அவுஸ் திரேலியாவை வென்றது இலங்கை

78 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை வென்றது இலங்கை

August 16, 2011  10:06 pm
இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ் அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத் தடுப்பில் ஈடுபட்டது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தரங்க 111 ஓட்டங்களை பெற்றார். மேலும் தில்ஷான் 55 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 49 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணி சார்பாக டக் பொலின்ஜர் 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பெற்றார்.

பதிலுக்கு 287 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி 44.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில் 208 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. அவுஸ்திரேலிய அணி சார்பாக ஹசி 63 ஓட்டங்களை பெற்றார்.

இதன்படி 78 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை இலங்கை வென்றது. மலிங்க 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: