வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

அழகிரி வழக்கு: போலீசார்மீது கோர்ட் கண்டனம்.அரசியல் பழிவாங்கலாக தெரிகிறது



மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள தயா வலைதள பூங்கா நிறுவன மேலாளர் மணிகண்டன ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்,’’வலைதளபூங்காவில் அழகிரி, காந்தி அழகிரி, துரைதயாநிதி மூவரும் இயக்குநர்களாக இருக்கின்றன்ர். தொழிலதிபர் மார்ட்டினிடம் 3 ஏக்கர் 18 செண்ட் மற்றும் 78 செண்ட் நிலத்தை 2010ல் 85 லட்சத்திற்கு முறையாக பத்திரப்பதிவு செய்து நிலத்தை வாங்கியிருக்கிறோம்.

அந்த இடம் நாகேந்திர அய்யர், நாகேந்திர பூஜை வகையறா அறக்கட்டளைக்கு சொந்தமாக இருந்தது.   இந்த இடம் விவசாயத்திற்கு உதவாது என்று கூறி மார்ட்டினிடம் விற்றுள்ளனர்.  அவரிடம் இருந்து நாங்கள்  முறையாக கிரயம் செய்துள்ளோம்
இந்நிலையில் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்தை நாங்கள் மோசடி செய்து அபகரித்துவிட்டோம் என்று பொய்ப்புகார் கூறுகின்றனர். இதனால் எங்களை விசாரித்து வருகின்றனர்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீது நீதிபதி சுதாகரன் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப்பின்னர், 9 வருடங்களுக்கு முன்பு முறையாக வாங்கியிருக்கிறார்கள்.அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த தொந்தரவுகளை கொடுப்பதாக தெரியவருகிறது.
எனவே விசாரணைக்கு இந்த நீதிமன்றம் இடைக்காலத்தடை விதிக்கிறது. இது சம்பந்தமாக ஏதும் புகார் இருந்தால் டிஜிபி மூலமாக அதை கோர்ட்டுக்கு தெரிவியுங்கள். யூகத்தின் அடிப்படையில் நடவடிக்கை ஏதும் எடுக்காதீர்கள் என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார் நீதிபதி.
திருச்சி இன்பத்தமிழன்
 ஜெயலலிதா ஆட்சி நடக்கும் பொழுது இந்த நிலத்தை வாங்கியுள்ளார் மார்டின். 2004 இல் இதனை எதிர்த்து ஒருவர் சிவில் வழக்கு தொடர்ந்தார். நீதி மன்றம் மார்டினுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறியது. வழக்கு தொடர்ந்தவர் உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்துள்ளார். வழக்கு உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது எப்படி போலிஸ் அதே வழக்கை கையில் எடுத்து விசாரிக்கலாம்.? இப்போதைய நிலவரம்: கீழ் கோர்ட் தீர்புபடி மார்டின் வாங்கிய நிலம் மார்டினுக்கே சொந்த மானது. அதனை 2010 இல் மார்டின் அழகிரியின் குடும்ப நிர்வாகத்துக்கு விற்றுள்ளார். இதனால்தான் நீதி மன்றம் தலையிட்டுள்ளது. மக்கள் ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்து ஆட்சி செய்வதற்காக, பொய்வழக்கை போடா போலிசுக்கு கற்று கொடுக்க அல்ல.

சென்னை புறம்போக்கு
இது தமிழக அரசுக்கு கிடைத்த இரண்டாவது அடி. முதல் அடி சமசீர் கல்வி வழக்கில். ஜெயலலிதா அடிகடி கூறுவார் "எனது தலைமையிலானா அரசு" என்று. எனவே இதை ஜெயலிதாவுக்கு நீதி மன்றம் கொடுத்த இரண்டாவது அடி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

கொடைநாடு பன்னாடை
இதில் உல் குத்து இருக்கு, நாங்க்கள் நம்ப மாட்டோம். முறையான விசாரணை தேவை.

கருத்துகள் இல்லை: