பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான கருணா எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கறடியனாறு பிரதேசத்திலமைந்துள்ள கல்வாடியொன்றினுள் புகுந்து அங்கு வேலைபுரிந்த வேலையாட்களை விரட்டியடித்துவிட்டு குறிப்பிட்ட கல்வாடியின் உரிமையாளரான தனது முன்னாள் சகாவிற்கு அடி உதை வழங்கிய சம்பவம் ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, குறிப்பிட்ட கல்வாடியினை கருணாவின் முன்னாள் ஊடக இணைப்பாளரான ஜூலியன் நடாத்தி வருகின்றார். இவர் கருணாவின் ஊடக இணைப்பாளராகவிருந்த காலத்தில் இவருக்கு கல்வாடிக்கான அனுமதிப் பத்திரத்தை கருணா பெற்றுக்கொடுத்திருந்தார்.
கடந்த பொதுத்தேர்தலுடன் ஜூலியன் கருணாவை விட்டு விலகிச் சென்றது மாத்திரமல்லாது கருணா மீது சேறு பூசும் துண்டுப்பிரசுரங்கள் , சுவரொட்டிகள் போன்றவற்றையும் வெளியிட்டிருந்ததாக உள்வீட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கல்வாடிக்கு சென்ற கருணா ஜூலியனை தாக்கும்போது உன்னிடமுள்ள ஆயுதங்கள் எங்கே எனவும் கேட்டுள்ளார்.
கருணா இவரிடம் ஆயுதங்களை கேட்டமை சாதாரண விடயமாக இருக்க முடியாது. காரணம் ஜூலியன் நீண்ட காலம் அவரது ஊடக இணைப்பாளரா இருந்துள்ளார். ஆகவே ஜூலியன் ஆயுதங்களை பயன்படுத்தியது கருணா அறிந்திருந்திருக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக