தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் முகாம் வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் : தமிழக அரசு!
தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் அனைத்தும் முகாம் வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான பணிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாமில் இயங்கிவரும் அன்னை தெரசா மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அமிர்த செல்வநாயகி, ஜூலியட் கொன்சி, தென்றல் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த நாகம்மாள், ஞானசீலி, புதிய உதயம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த விஜயா, பத்மஜோதி ஆகிய மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு சுழல் நிதியினையும், வாசுகி, பாக்கிய லட்சுமி ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக