யாழ். மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு பாரிய நீர்வழங்கல் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இதற்கமைய 164.4 பில்லியன் ரூபா செலவில் பாரிய நீர்வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கமைய யாழ்ப்பாணம், கொடிகாமம், கரவெட்டி, சாவகச்சேரி, கோப்பாய், அச்சுவேலி, சண்டிலிப்பாய், சங்கானை, நல்லூர், எழுவைத்தீவு, மற்றும் மூளாய், பளை, புங்குடுதீவு, கைதடி, அனலைதீவு, பூநகரி, அரியாலை, காரைநகர், வட்டுக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் பாரிய நீர் தாங்கிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பகுதிகளில் காணப்படுகின்ற குளங்களை ஆழப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அணைக்கட்டினை உயர்த்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக