குகநாதன் மீதான தாக்குதலின் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமிடியசஸ்
உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதலின் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமிடியசஸ் இருப்பதாக பொலிஸ் தரப்பை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.உதயன் பத்திரிகை தனக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்ததால் ஆத்திரமுற்ற குறிப்பிட்ட சட்டத்தரணி ரெமிடியஸ் குகநாதன் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இத்தாக்குதலை மேற்கொள்ளுமாறு பணித்ததாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்டு கைது செய்ப்பட்ட சந்தேக நபரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னவன் என அழைக்கப்படும் 40 வயதான இரத்னசிங்கம் சந்திரகுமார் என்பவர் கோப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற சுமார் 50 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.
இவரை குகநாதன் மீது தாக்குதல் நடத்துமாறு பணித்த சட்டத்தரணி ரெமிடியஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவராவார்.
கைது செய்ப்பட்ட சந்தேக நபருடன் தொடர்புடைய பல வழக்குகளில் குறிப்பிட்ட சட்டத்தரணி ரெமிடியஸ் நீதிமன்றத்தில் வாதாடி வந்துள்ளார். இந்நிலையில், குகநாதன் மீது தாக்குதல் நடத்தினால் தான் கட்டணம் எதுவுமின்றி வழக்குகளின் போது நீதிமன்றத்தில் சமூகமளித்து வாதாடுவேன் என அவர் உறுதி வழங்கியதாகவும் சந்தேக நபர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறிப்பிட்ட சட்டத்தரணி மேலும் இரு சந்தேகநபர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக