வெறும் தாஸா? இல்ல முருகதாஸா!
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் தயாரிப்பாளராக அவதாரமெடுத்திருக்கிறார். அதன் முதல் முயற்சியாக ஏ.ஆர்.முருகதாஸ், ஹாலிவுட் நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘எங்கேயும் எப்போதும்’. ஜெய், அஞ்சலி, ஷர்வானந்த், அனன்யா நடிக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான எம்.சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தை பற்றி முருகதாஸ் பேசும் போது, பாக்ஸ் நிறுவணம் என்னை படம் இயக்க சொல்லி தான் முதலில் கேட்டார்கள். இந்தியில் நிறைய கமிட்மெண்ட் இருப்பதால் அதை நான் மறுத்துவிட்டேன். ஆனால் அவர்களோடு சேர்ந்து தமிழில் படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தோம். நல்ல படங்களும் நல்ல இயக்குனர்களும் தமிழ் சினிமாவுக்கு கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே இதன் நோக்கம். நிச்சயமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் தினமும் காலை நான்கு இட்லி தானே சாப்பிடமுடியும் என்றார்.
இதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக், விழுப்புரம் பக்கத்தில் கள்ளகுரிச்சி என்ற இடத்தில் பிறந்த முருகதாஸ் இன்று பாலிவுட்டே... ஏன்? உலகமே வியக்கும் அளவிற்கு பெரிய இயக்குனராகிவிட்டார். அதுமட்டும் இல்லாமல் ஹாலிவுட் நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டாரோடு இணைந்து படம் தயாரிக்கிறார். இவரைப் பார்க்கும் போது, இவர் வெறும் தாஸ் இல்ல... ஏ.ஆர்.முருகதாஸ் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளலாம் என்றார்.
இப்படம் இரண்டு காதல் ஜோடிகளை மையமாக கொண்ட கதை. ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலியும், சர்வானந்த் ஜோடியாக அநன்யாவும் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தின் இசை விரைவில் வெளியாக உள்ளது.
முருகதாசு இப்பதான் நீ வளர்ந்து வந்துட்டு இருக்க இன்னும் நீ வளர வண்டும் சினிமாவில், அதுக்குள்ளே நீ உன் அடுத்த படத்துல விஜயை நடிக்க கேட்டயாமுள்ள. ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ முரு, கூட இருந்து குழிய தொண்டுறவனுகலதான் நீ சினிமாவில் பார்த்திருப்ப அனால் குழிய தோண்டி வச்சிட்டு கூட வருபவங்களை நீ பார்த்திருக்க மாட்டாய், உன் அடுத்த படத்தில் நீ பார்ப்பாய்...........

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக