குலசேகரம்: கன்னியாகுமரி அருகே மதுக் கடைக்குச் சென்று திரும்பிய இரண்டு வாலிபர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், அவர்கள் மீது மதுவை ஊற்றி அவமதிப்பது போல நடந்து கொண்டது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
குமரி மாவட்டம் குலசேகரத்தில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கிருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள மலைகிராம மக்கள் சிலர் வந்து குடித்து செல்வது வாடிக்கை. 2 கடைகளிலும் பார் வசதி இல்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த கடையில் மது வாங்கிய சிலர் சாலை ஓரத்தில் நின்று குடித்தனர். அப்போது குலசேகரம் அரசமூடு சந்தி்ப்பில் உள்ள காவல் நிலையம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது டிப்டாப் உடையணிந்து பைக்கில் வந்த 2 வாலிபர்கள் டாஸ்மாக சரக்கை வாங்கி இடுப்பில் சொருகி வைத்திருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி சோதித்தனர். வண்டிக்கான எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தது. இதனால் பைக்கில் பின்னால் இருந்த வாலிபரை சோதனை போட்டனர்.
அவரிடம் மது பாட்டில் ஓன்று சிக்கியது. இதுகுறித்து கேட்ட போலீசாரிடம் வீட்டுக்கு சரக்கு வாங்கி செல்வதாக வாலிபர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திடீரென போலீசார் அந்த வாலிபர்கள் வைத்திருந்த மதுபாட்டிலை பிடுங்கி திறந்து வாலிபர்களின் தலையில் மதுவை ஊற்றினர்.
எதிரே பஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் இதை வேடிக்கை பார்த்ததால் 2 வாலிபர்களும் அவமானத்தால் தவித்தனர். சிலர் போலீசாரை தட்டி கேட்டனர். அதற்கு போலீசார் அலட்சியமாக பதில் கூறினர்.
இது என்ன புதுவித தண்டனையோ!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக