கடவுளை நம்புறது ஆன்மீகம். கடவுள் பேரால எதைச்சொன்னாலும் நம்புறது ஆன்மீகமல்ல. பிரசன்னம் எப்படி பாக்குறாங்க? அதிலே தென்படுகிற அறிகுறிகளுக்கு யார் அர்த்தம் சொல்லுறார்? அவர் விருப்பு வெறுப்பில்லாமல்தான் அந்த அறிகுறிகளுக்கு அர்த்தம் சொல்றாருன்னு எப்படி நம்புறது? அதை வெளிப்படையாகத்தான் பண்றாங்களா அல்லது ஓமகுண்ட திருச்சபையினர் மட்டும் பண்ணுறாங்களா? சாமியை நம்புறது சரி, ஆசாமியை நம்புறது தப்பு. கிடைத்த நகைகளை ஏதாவது ஒரு விதத்திலே பயன்படுத்தினால்தான் அந்த நகைகளுக்கு மரியாதை. இந்த நகைகளில் இன்றைய கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் முன்னோர்களின் காணிக்கையும் (அப்போது அவர்கள் இந்துக்களாகத்தான் இருந்தனர்) அல்லது அவர்கள் மன்னருக்கு நாட்டில் சாலை, குடிநீர் வசதிகளுக்காக கொடுத்த வரிப்பணமும் உண்டு. எனவே இதை பொதுப்பணிகளுக்கு தாராளமாக பயன்படுத்தலாம். சரி இதை ஹிந்துக்களுக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம் என்றால் அதை ஹிந்து பிற்படுத்தப்பட்டவர், ஹிந்து தலித் உட்பட எல்லா ஹிந்துக்களுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பயன்படச்செய்ய வேண்டும். அல்லது இதை சும்மாவேதான் வைத்திருப்போம் என்றால் அதை ரிசர்வ் வங்கியிலாவது வைத்திருங்கள், நாட்டின் ரூபாய் மதிப்பு ஏறும், பெட்ரோலிய பொருள் விலையாவது குறையும். இதெல்லாம் எதுவுமில்லை, பிரசன்னம் பார்ப்பவர்கள் சொல்வதைத்தான் நம்புவேன் என்றால் இந்த பிரசன்னம் பார்ப்பவர்கள் உண்மையில் கடவுள் பிரசன்னத்தில் சொன்னதைத்தான் சொன்னார்களா அல்லது இவர்களாக இட்டுக்கட்டி சொன்னார்களா என்பதை சந்தேகத்துக்கிடமின்றி ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு அந்த பிரசன்னம் பார்ப்பவர்களின் மீது பகவானை வேண்டிக்கொண்டு பெட்ரோலை ஊற்றி பற்றவைத்துவிட வேண்டும். உண்மையில் அவர்கள் பகவானின் வார்த்தைகளைத்தான் கூறினார்களென்றால் அவர்களை பகவான் பிரகலாதனை காப்பாற்றியதைப்போல் காப்பாற்றுவார். அவர்கள் பொய்யாக கூறியிருந்தால் அவர்களுக்கு பகவான் தக்க தண்டனை அளிப்பார். அதன்பிறகு அதுபோல பகவான் பேரைச்சொல்லி யாரும் பொய் சொல்லமாட்டார்கள்.
ஊரை ஏமாத்திய கொள்ளைகாரர்கள் பிரச்னம் பார்க்கும் ஜோதிடர்களைதான் நம்புவோம் என்று அடம்பிடிக்கிறார்கள். இவர்களின் வழக்குகளை எல்லாம் விசாரணைக்கு எடுப்பதே பெரும் கேலிக்கூத்து. இனி இந்தியாவின் எல்லா வழக்குகளையும் ஜோதிடர்களின் உதவியாலேயே தீர்க்கலாமே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக