புதன், 17 ஆகஸ்ட், 2011

பாரதிராஜாவின் லட்சிய படம்!


       ‘பொம்மலாட்டம்’ படத்திற்கு பிறகு பாரதிராஜா இயக்க இருக்கும் அடுத்த படம் ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’. இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். பாரதிராஜா படம் என்பதால் படத்தின் பாடல்கள் வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டர் ஜி.வி.

இதில் பார்த்திபன் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதைப் பற்றி பார்த்திபன் தன் ‘ஃபேஸ் புக்’ முகப்பில் தெரிவித்திருப்பது... 
முதல் முறையாக...
இரட்டை வேடத்தில்.
இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களை,
அதுவும் தமிழ் சினிமா பாரா கிராமங்களை மண்வாசனையோடு
பதிவு செய்த பராகிராமம் மிகுந்த இயக்குனர் பாரதிராஜா அவர்களின்
லட்சிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறேன்!
வீரமும்,காதலும்,
வேகமும்,விவேகமும்
சோகமும்,தியாகமும்.... மும்,....மும்
மும்முரமாக முயற்சியும் பயிற்சியும் செய்து வாழவேண்டிய பாத்திரம்.
ஏற்கனவே தேனீயாக தேடி அலைபவன் நான்.
இம்முறை தேன் சுவைக்க தேனிக்கே செல்கிறேன். இனிக்கும் செய்தி இன்னைக்கு இதுதான்.....

கருத்துகள் இல்லை: