சுரண்டை அருகே வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் சுருட்டிய பாதிரியார் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை பெரியகுளம் கணவாய்மடை அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்குள்ள அமலை செடிகள் புதருக்குள் இருந்த பிணத்தை மீ்ட்டனர். அப்போது இறந்து கிடந்தவர் இடுப்பில் துண்டு மட்டுமே அணிந்திருந்தார். இறந்தவரின் முகம், கை, கால்களில் இருந்த காயங்களில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கடையநல்லூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகர் ஜெயம்பார்னபாஸ் என்பது தெரிய வந்தது. ஜெயம்பார்னபாஸ் கடையநல்லூர், சுரண்டை, சிங்கை போன்ற பகுதிகளைச் சேர்ந்த வாலிபர்களிடம் தான் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதாகவும், வேலைவாய்ப்பு அதிகாரிகளை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், பணம் தந்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
அவர் பேச்சை நம்பிய சிலர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கித் தரவில்லை. சிங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி் ரூ.3. 5 லட்சம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இதே போல் பலரிடம் அவர் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஜெயம்பார்னபாஸால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை காரி்ல் கடத்தி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சிங்கையைச் சேர்ந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக