வியாழன், 4 ஜூலை, 2019

நான் பதவி விலகி விட்டேன்; ராஜினாமா கடிதத்தை வெளியிட்ட ராகுல் காந்தி

zeenews.india.com - shiva-murugesan-:
நான் பதவி விலகி விட்டேன்; ராஜினாமா கடிதத்தை வெளியிட்ட ராகுல் காந்தி
புது டெல்லி: 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதற்கான கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு நடைபெற்ற 2019 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.< பாஜகவுக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டும் தனித்து வெற்றி பெற்றது. அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களிலும் வென்றன. மற்ற கட்சிகள் 98 இடங்களில் வெற்றி பெற்றன. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரண்டு இடங்களில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் கோட்டை எனக்கூறப்படும் அமேதி தொகுதியிலும், முதல் முறையாக தென்னிந்தியாவின் கேராள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் மக்களவை தேர்தலில் அமேதியில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றார்.
கடந்த மே 25 அன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகியதாகவும், அதற்கான கடிதத்தை கட்சியின் மேலிடத்தில் தந்துள்ளதக்கவும், அந்த பொறுப்பில் காந்தி குடும்பத்தை சேராத ஒருவரை, குறிப்பாக தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரையோ அல்லது ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவரையோ நியமிக்குமாறு மூத்த தலைவர்களிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக வந்த தகவல்கள் உண்மை இல்லை காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுக்குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமா குறித்து கூறுகையில், ‘நான் ஏற்கனவே கட்சி தலைமையிடம் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன். நான் காங்கிரஸ் தலைவர் இல்லை. புதிய தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பை ஒரு குழுவிடம் ஒப்படைக்குமாறு பதவி விலகிய உடனேயே காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இன்று தனது ராஜினாமா கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஏன் ராஜினாமா செய்கிறேன் என்பதற்கு 4 பக்க விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுவதில் பெருமை கொள்வதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். அனைவருக்கும் நன்றி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: