திங்கள், 1 ஜூலை, 2019

தமிழ்நாட்டின் அத்தனை சீரழிவுகளுக்கும் அந்த 2001 தேர்தல்தான் ... கலைஞர் கைது வீடியோ


LR Jagadheesan :
பெண்ணும் பேயாட்சி செய்வாள் என்பது நிரூபணமான நாள்
வயதோ, வயோதிகமோ, தூங்கா இரவின் மோசமான அலைக்கழிப்போ ஒருவரின் மனவலிமையை, வைராக்கியத்தை அசைக்க முடியாது என்பதை உலகம் உணர்ந்தநாள்
தலைமைப்பண்பென்றால் என்ன என்பதும் கட்சித்தலைமையின் உண்மையான வலிமை கட்சிக்காரர்களின் தோளில் இருந்து உருவாவதே தவிர குடும்பத்திடம் இருந்து அல்ல என்பதும் காட்சியாய் கண்முன் விரிந்த நாள் ஒரு அரசியல் தலைமைக்கும் கட்சிக்காரர்களுக்கும் இடையிலான குடும்ப உறவு எத்தனை ஆழமானது என்பதை எமெர்ஜென்ஸிக்குப்பின் ஒட்டுமொத்த திமுகவினரும் உணர்ந்து கதறிய ஓரிரவு ஒரு முழுநேர அரசியல்வாதிக்கு, குறிப்பாக ஒரு கட்சித்தலைமைக்கு உண்மையான குடும்பம் என்பது அவரது கட்சி தான். குடும்பத்தவரைவிட அவரிடம் கட்சிக்காரர்களுக்கே கூடுதல் பாத்தியதை உண்டு என்பதற்கு அந்த அநியாய நள்ளிரவு கைதுக்கு பலியான உயிர்களே ரத்தசாட்சி
தமிழ்நாட்டு ஊடகங்களின் மனசாட்சி
உயிர்ப்போடு துடித்த கட்டக்கடைசி நிகழ்வும் அதுதான்
தன்மீது ஊழல் குற்றம் சுமத்திய ஆட்சி
அதை நிரூபிக்கும்வரை ஜாமீன் கோரமாட்டேன்
என்று உறுதியாய் நின்றவரை கைது செய்த கொடுங்கோலி கையை பிசைந்தபடி நிபந்தனையின்றி விடுதலை செய்த விசித்திர காட்சிக்கு வித்திட்ட நாள்

இத்தனை கொடுமைகளுக்கும் காரணம் 2001 தேர்தல் முடிவு. அதற்கு காரணமானவர்கள் “அரசியல் யோக்கியர்” மூப்பனார். மதசார்பற்ற மாணிக்கம் அன்னை சோனியா. கொள்கைக்குன்றுகளான இடதுசாரிகள். சமூகநீதிப்போராளி மருத்துவர் ராமதாஸ். இரண்டு முஸ்லிம் லீக்குகள்.
இதுகள் அப்போது அதற்கு சொல்லிக்கொண்ட காரணம் தமிழ்நாட்டின் மதசார்பற்ற அரசியலை பாதுகாக்கப்போவதாக. ஆனால் நிஜத்தில் நடந்தது தேர்தலிலேயே நிற்கமுடியாத தண்டிக்கப்பட்ட குற்றவாளியை, கொடுங்கோலியை முதல்வராக்கி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு அரசியலையும் மொத்தமாய் சீரழித்தது தான் மிச்சம்.
இன்றைய தமிழ்நாட்டின் அத்தனை சீரழிவுகளுக்கும் அந்த 2001 தேர்தல் முடிவுகள் முக்கியமான துவக்கம். மோசமானதொரு திருப்புமுனை. அதன் மிச்சசொச்சத்தை இதே கும்பல் (காங்கிரஸ், முஸ்லிம் லீக் நீங்கலாக) மீண்டும் 2016 தேர்தலில் அரங்கேற்றியது. அதுவும் விஜயகாந்தை முதல்வராக முன்னிறுத்தி. எவ்வளவு பெரிய அவலநகைச்சுவை?
அதன் பலனைத்தான் இப்போது அமித்ஷா திமுகவின் எடுபிடிகளான எடப்பாடி/ஓபிஎஸ்ஸின் பொற்கால ஆட்சியில் தமிழகம் அனுபவிக்கிறது.
21ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு அரசியல் சீரழிவுக்கு 2001, 2016 தேர்தல்கள் இரண்டுமே மறக்கவே முடியாத, மறக்கவே கூடாத பாடங்கள். எச்சரிக்கை மணிகள்.
முற்போக்கு வேஷத்தில் வரும் திட்டமிட்ட மாய்மால அரசியலுக்கு மக்கள் மயங்கினால் ஒரு ஒட்டுமொத்த மாநிலமும் அதன் சமூக அரசியல் பொருளாதாரமும் எப்படி சீரழியும் என்பதற்கு அந்த இரு தேர்தல்களும் நிரந்தர உரைகற்கள்.
அடுத்த தமிழ்நாட்டு சட்டமன்றத்தேர்தலில் அதேபோன்றதொரு மாய்மாலத்தை அமித்ஷாக்கள் அரங்கேற்றக்கூடும். கண்டிப்பாக. அதை எதிர்கொண்டு முறியடிக்க திமுகவும் தமிழ்நாடும் தயாரா என்பதே நம் முன் உள்ள கேள்வி.

கருத்துகள் இல்லை: