ஞாயிறு, 30 ஜூன், 2019

கீழக்கரை இளைஞர் சிவபழனி.. இளம் வயதில் நீதிபதி ஆகி சாதித்த இளநீர் விற்பவரின் மகன்

பாண்டியன் சுந்தரம் : இளம் வயதில் நீதிபதி ஆகி சாதித்த இளநீர் விற்பவரின்
மகன் கீழக்கரை இளைஞர் சிவபழனி! கீழக்கரை அரசு மருத்துவமனை எதிரே இளநீர் வியாபரம் செய்து வருபவர் நாகேந்திரன்.
இவரது மகன் சிவபழனி (வயது 33)மத்திய அரசு நடத்திய‌ தேர்வில் தமிழகத்தில் தேர்வான 213 பேரில் ஒருவர். இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வான 3 நபர்களில் ஒருவராக சிவில் கோர்ட் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
படிக்கும் காலத்திலே இவர் தன் தந்தைக்கு உதவியாக இளநீர்க் கடையில் பணியாற்றி வந்தார்.உழைப்பால் உயர்ந்த சிவபழனிக்குக்கும் ஊக்கமளித்த குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள்

கருத்துகள் இல்லை: