சனி, 6 ஜூலை, 2019

ராஜேந்திர சோழனுக்கு கம்போடிய அரசு சிலை அமைக்கிறது .. கம்போடியாவில் அடுத்த ஆண்டு திறப்பு விழா

rajendra chozhan statue to be build in cambodiaநக்கீரன் :கம்போடியாவை சேர்ந்த கலை பண்பாட்டுத் துறை மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவம் ஆகிய அமைப்புகள்  இணைந்து காஞ்சிபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்கள் மற்றும் புராதன இடங்களில் கடந்த 5 நாட்களாக ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில் கம்போடியா நாட்டின் கெமர் பேரரசுக்கும், தமிழகத்தை சேர்ந்த பல்லவ மற்றும் சோழ பேரரசுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கம்போடிய நாட்டு அரசு அதிகாரிகள், "கம்போடிய நாட்டு பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் பல்லவ மற்றும் சோழ பேரரசுகளின் வரலாற்றை பாடமாக வைக்கவும், திருக்குறளை கெமரில் மொழியில் பெயர்த்து பள்ளிகளில் பாடமாக வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கும், இரண்டாம் நந்திவர்மனுக்கும் சிலை வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அச்சிலைகளின் திறப்புவிழா கம்போடியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும்" என்று கூறினார்கள்.

கருத்துகள் இல்லை: