சனி, 6 ஜூலை, 2019

இந்து ஓட்டு இந்துத்துவ ஓட்டு என்று காட்டப்படும் பூச்சாண்டிகளுக்கு பயப்படாதீர்கள்.

Anthony Fernando : உதயநிதிக்கு ஒர் அறிவுரை!
இப்ப நிறைய அல்லக்கைங்க உங்களிடம் வந்து, "தம்பி உங்க தாத்தா அப்பாவை போல ரொம்ப இந்துத்துவ எதிர்ப்பு பேசி இந்து ஓட்டுக்களை திமுகவிற்கு எதிராக திருப்புகிற வேலைகளில் ஈடுபட வேண்டாம். அதோடு அப்பப்ப கோவில் கும்பாபிசேகங்களுக்குப் போய் கலந்து அங்கே பரிவட்டம் கட்டிக் கொண்டால் இந்து ஓட்டுக்களை கவரலாம்" என்று அறிவுரை சொல்வாங்க. அவனுங்களையும் அவனுங்களோட அப்படியான அறிவுரைகளையும் கண்ணுக்கு எட்டாத தொலைவிற்கு துரத்தி விடுங்க....
ஏனென்றால் தமிழகத்தின் எதார்த்தம் வேறு மாதிரியானது.... இங்கே இந்து ஓட்டுக்கள் என்று ஒரு ...யிரும் கிடையாது ... அது எம்பாட்டன் பெரியாரின் உழைப்பினால் சாத்தியமானது. அதனால் தான் உங்க தாத்தா எம்பாட்டன் கலைஞர் தீவிர இந்துத்துவ எதிர்ப்பு கருத்துக்களை பேசிய காலத்தில் தான் தமிழக மக்கள் அவரை தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர வைத்தார்கள். ராசராசன் கட்டிய பெரிய கோவிலில் பரிவட்டம் கட்டிக் கொண்ட போது அதே மக்கள் தான் அவரை நிராகரிக்கவும் செய்தார்கள்.
உங்களுடைய தந்தை ஸ்டாலினும் "திமுகவினரில் 80% இந்துக்கள் தான்" என்று பேசிய போது தோல்வியை பரிசாக கொடுத்த மக்கள், அவர் சனாதன இந்துத்துவ எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றி வந்த பிறகு அடுத்த வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரை இமாலாய வெற்றியடையச் செய்தார்கள்....

ஆதலால் இந்து ஓட்டு இந்துத்துவ ஓட்டு என்று காட்டப்படும் பூச்சாண்டிகளுக்கு பயப்படாதீர்கள்... இங்கே மத மாச்சரியங்களைத் தாண்டி ஒரு சில சில்வண்டுகளைத் தவிர தமிழ் மக்கள் பங்காளி உறவு முறை கொண்டாடுபவர்கள்....
ஆகையால தான் இந்து இந்து அல்லாதவர் என்ற பிரிவினையை தூண்ட ஆதாயம் தேட முடியாத காவி இந்துத்துவ பொறுக்கிகள் ஆண்ட பரம்பரை என்ற புதுவிதக் கோசத்தோடு சாதி வெறியை தூண்டி விட்டு தமிழர்களை துண்டாட நினைக்கிறார்கள்... ஆதலால் உங்களைச் சுற்றி சாதி வெறியர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவைகளெல்லாம் இந்துத்துவ காவி வெறிக் கூடங்களில் வேட்டையாடப் பழக்கப்பட்ட ஓநாய்களாக இருப்பர்...
அதே போல் சாதீய ஓநாய்களுக்கும் தனித்து நின்று தமிழ் மண்ணில் ஒன்றையும் அவைகளால் ...ழுத்த முடியாது என்ற உண்மை தெரியும் ... ஆதலால் தான் அவைகளும் இங்கே முற்போக்கு திராவிட கம்முனிச வேடமிட்டுக் கொண்டு திரிகின்றன... தனித்து நின்றால் சொந்த சாதிக்காரனோட ஓட்டே கிடைக்காது என்பதை அந்த ஓநாய்கள் நன்கு அறியும்...
ஆதலால் எந்தவித பூச்சாண்டிகளுக்கும் பயப்படாமல் உங்க தாத்தாவின் குருநாதர் எம்பாட்டன் பெரியாரை மனதில் உள்வாங்கி களம் கண்டால் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவற விடுகிற சூழல் உருவாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
இப்படிக்கு
அன்புடன்
அந்தோணி

கருத்துகள் இல்லை: