சனி, 6 ஜூலை, 2019

நடிகை கஸ்தூரி :டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம்

“தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை" எம்பி கனவுல இருந்தவரை  கம்பி எண்ண வச்சுருச்சே! நடிகை கஸ்தூரி டுவீட்Kasturi Shankar (நடிகை கஸ்தூரி)  : எண்ணையை தடவிக்கிட்டு மனல்ல புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் - பழமொழி. எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறதுதான் கிட்டும். - புதுமொழி. டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம் ! எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே
தினத்தந்தி :தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை, எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே என நடிகை கஸ்தூரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சென்னை, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தி.மு.க ஆட்சி காலத்தில் 2009-ல் புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. 2009-ல் பதிவான வழக்கில் சிறப்பு நீதிமன்றம்  இன்று தீர்ப்பு வழங்கியது. தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என  சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. தண்டனையை இன்றே வழங்குமாறு நீதிமன்றத்தில் வைகோ கோரிக்கை வைத்தார். வைகோவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், ஒரு ஆண்டு  சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என நான் பேசினேன். விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவது குற்றமல்ல என்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.

நான் பேசியதை அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நேரில் சொன்னேன். நான் பேசியது தேசதுரோகம் அல்ல. நீதிபதி வழங்கிய தீர்ப்பை வாங்கி பார்த்தோம், அதில் குறைந்தபட்ச தண்டனை கேட்டதாக இருந்தது.

நான் என் கருத்தை தொடர்ந்து விதைப்பேன், தொடர்ந்து விடுதலைபுலிகளை ஆதரித்து பேசுவேன். எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது, நான் அதிகபட்ச தண்டனை தான் கேட்டேன்.

ஆயுள் தண்டனை என்றால் கூட மகிழ்ச்சியோடு ஏற்பேன். விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன். நாடாளுமன்றத்தில் என்குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு எதுவும் நான் கூற விரும்பவில்லை என்று வைகோ கூறி இருந்தார்.

இந்நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

"2009 இல் ஈழ ஆதரவு பேச்சுக்காக வைகோ மேல் தேசத்துரோக வழக்கு போட்டது யார் ? அன்றைய திமுக அரசு. இதை தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல, "எண்ணையை தடவிக்கிட்டு மணல்ல புரண்டாலும் ஒட்டுறது தான் ஒட்டும் - பழமொழி.  எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறது தான் கிட்டும். - புதுமொழி.  டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம் ! எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே !" என்றும் இன்னொரு டுவீட் போட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: