![]() |
புஜித் ஜெயசுன்டேரா - ஹேமாசிறி பெர்னான்டோ |

இந்த குழுவினர் விரிவான விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் பங்கேற்க வருமாறு காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுன்டேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால், உடல்நிலை சரியில்லை என்று கூறி போலீஸ் மருத்துவமனையில் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இன்று அந்த மருத்துவமனைக்கு சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள் அவரிடம் சிறிது நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.
இதேபோல் கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதுகாப்புத்துறை செயலாளர் ஹேமாசிறி பெர்னான்டோவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, மனிதநேயத்துக்கு எதிரான கொடுங்குற்றத்தில் ஈடுபட்ட இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதாக அரசுதரப்பு தலைமை வழக்கறிஞர் டப்புலா டி லிவேரா குற்றம்சாட்டி இருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக